தேசிய அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு - டி. பி.சானக 

Published By: R. Kalaichelvan

15 Feb, 2019 | 03:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேசிய அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கு  மக்கள் விடுதலை முன்னணியினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் எதிர்ப்பினை  தெரிவித்துள்ளமையானது எதிர்கட்சியினரது எதிர்ப்புக்களுக்கு மிகவும் பலமாக காணப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர்  டி. பி. சானக தெரிவித்தார்.

பொதுஜன  பெரமுனவின்  தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுமக்களின் நன்மைக்காக ஒன்றும் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் ஐக்கிய தேசிய கட்சியினால் முன்னெடுக்கப்படவில்லை.   

கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள  முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளவே இந்த அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது . 

இம்மாதம் 20 ஆம் திகதி தேசிய அரசாங்கம் நிச்சயம் உருவாக்கம் பெறும் என்று ஐக்கிய தேசிய கட்சியினர்  குறிப்பிடுவது  பொய்யான வாதமாகும்.

இந்த பாராளுமன்றத்தில் ஒருபோதும் தேசிய அரசாங்கம் ஒன்று உருவாகுவதற்கு  எவ்விதத்திலும் இடமளிக்கமாட்டோம். இதற்காக எந்நிலைக்கும் செல்லத் தயார்

எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை இளைஞர்களுக்கு வழங்க ஆரம்பித்துவிட்டார். 

இளைஞர்களை மையப்படுத்தியே தேசிய பொருளாதார கொள்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்  என குறிப்பிடுவர் ஆனால் வேலையில்லா பட்டதாரிகளின்  கோரிக்கைகளுக்கு இதுவரையில் தீர்வை காண  நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21