9ஆவது ஐ.பி.எல். தொடர் நாளை மும்பை வான்­கடே மைதா­னத்தில் ஆரம்­ப­மா­கின்­றது. இதன் முதல் போட்­டியில் நடப்பு சம்­பியன் மும்பை இந்­தி யன்ஸ் அணி விளை­யா­டு­கி­றது.

மும்பை இந்­தியன்ஸ் அணியின் முக்­கிய வீர­ராகக் கரு­தப்­படும் இலங்கை அணியின் வேகப்­பந்து வீச்­சாளர் லசித் மலிங்க இந்தத் தொடரில் ஆடு­வரா என்­ப­துதான் அனை­வ­ரு­டைய எதிர்­பார்ப்­பா­கவும் இருக்­கி­றது.

காரணம் அவர் சில நாட்­க­ளாக காயம் கார­ண­மாக போட்டி­களில் பங்­கேற்­காமல் தவிர்த்து வரு­கி­றார். ஆசியக் கிண்­ணத்தில் ஒரு போட்­டி­யுடன் வில­கி­யி­ருந்தார் மலிங்க. அதே­போல நடந்து முடிந்த இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் ஒரு போட்­டியில் கூட விளை­யா­டாத நிலை யில் நாடு திரும்­பினார் மலிங்க.

இந்­நி­லையில் ஐ.பி.எல். போட்­டி­களில் அவர் கலந்­து­கொள்­வாரா என்பதை பலரும் கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.