கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள மிகப்பெரிய ஆடம்பரக் கப்பல்

Published By: R. Kalaichelvan

15 Feb, 2019 | 01:33 PM
image

(நா.தனுஜா)

ஆடம்பர வசதிகளைக் கொண்ட 'மிஸ் குயின் மேரி 2" என்ற பயணக் கப்பல் கொழும்பிற்கான தனது கன்னிப் பிரயாணத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

1132 அடி நீளமுடைய மிஸ் குயின் மேரி 2 கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்துள்ள மிகப் பெரிய கப்பல்களில் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

சுமார் 3800 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் துறைமுகத்தை வந்தடைந்த மேற்படி கப்பலை இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியக உத்தியோகத்தர்கள் வரவேற்றனர். 

கடந்த வருடம் 47 பயணிகள் கப்பல் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், இவ்வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் தற்போது வரை 12 பயணிகள் பிரயாண கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. 

மேற்படி 'மிஸ் குயின் மேரி 2" பயணிகள் கப்பல் கடந்த ஜனவரி 3ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்ததுடன், 108 இரவுகள் கடற்பிராந்தியத்தில் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து, எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி மீண்டும் நியூயோர்க் திரும்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

குறித்த பயணிகள் கப்பலானது 5 விருந்துபசார நிலையங்கள், 12 மதுபான மற்றும் தேநீர் சாலைகள், 5 நீச்சல் தடாகங்கள், கூடைப்பந்து மைதானம், டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சி நிலையம், சிகையலங்கார நிலையம் உள்ளிட்டவற்றை கொண்டமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55