இலங்கை துறைமுக அதிகாரிகளுக்கு அமெரிக்க கரையோர பாதுகாப்பு படை பயிற்சி

Published By: Vishnu

15 Feb, 2019 | 01:05 PM
image

அமெரிக்க கரையோர பாதுகாப்பு படையினர் (U.S. Coast Guard – USCG) துறைமுகப் பாதுகாப்பு தொடர்பில் ஆற்றல் மேம்படுத்தல் நடவடிக்கையொன்றை 25 இற்கும் மேற்பட்ட இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் கடந்த 11 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை இடம்பெறுகின்றது.

துறைமுகத்தின் பௌதீக பாதுகாப்பு முறைமைகள் மற்றும் பாதுகாப்பு ஆற்றல்களை பலப்படுத்த இந்த நிகழ்வு உதவியதுடன், துறைமுக பாதுகாப்பு திட்டங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் அமுலாக்கத்தை மேம்படுத்திய பயிற்ச்சிகளையும் இது உள்ளடக்கியிருந்தது.

இலங்கைக்கு கடல்வழி பாதுகாப்பு என்பது பயங்கரவாதம் மற்றும் ஏனைய அச்சுறுத்தல்களில் இருந்து அதிரித்த பாதுகாப்பை வழங்குவது மட்டுமல்லாது, இலங்கையின் சுபீட்சத்துக்கு பங்களிப்புச் செய்யும் ஏனைய நாடுகளுடனான வர்த்தகங்களை அதிகரிக்கவும் செய்யும்.

“துறைமுக பாதுகாப்பு தொடர்பில் இலங்கை வலுவான உறுதிப்பாடொன்றை வெளிப்படுத்தியது,” என்று இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு தலைமை வகித்த துறைமுக பாதுகாப்பு முன்னெடுப்புகளுக்கான இலங்கைக்கான அமெரிக்க கரையோர பாதுகாப்பு படையின் இணைப்பதிகாரி லெப்டினன்ட் மெற் ஆர்னோல்ட் தெரிவித்தார். 

“அதிகரித்த வர்த்தகங்களுக்கும் மற்றும் வர்த்தகத்துக்கான பிராந்திய மையமாக உருவாகும் இலங்கையின் இலக்கை அடைவதற்கும் அத்தியவாசியமான பாதுகாப்பு சூழலை உருவாக்குவதற்கு இந்த ஆற்றல் மேம்படுத்தல் நடவடிக்கை உதவியது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கரையோர பாதுகாப்பு படையின் சர்வதேச துறைமுக பாதுகாப்பு திட்டமானது கடல்வழி பாதுகாப்பு நடவடிக்கைகளின் புரிந்துணர்வுகளை உலக அளவில் விஸ்தரிப்பதற்காக 2003 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இந்த சர்வதேச தரங்களின் அமுலாக்கமானது கடற்பிராந்திய நாடுகளுக்கிடையிலான உலளாவிய பங்காண்மையொன்றாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08