ரஷ்ய முன்­னணி டென்னிஸ் வீராங்­கனை மரியா ஷர­போவா கடந்த மாதம் ஊக்­க­ம­ருந்து சர்ச் ­சையில் சிக்­கினார். ‘மெல்­டோ­னியம்’ என்ற ஊக்­க­ம­ருந்தை கவ­னக்­கு­றை­வாக பயன்­ப­டுத்தி விட்­ட­தாக ஒப்­புக்­கொண்ட ஷர­போவா உட­ன­டி­யாக இடை­நீக்கம் செய்­யப்­பட்டார்.

அவ­ருக்கு எத்­தனை ஆண்­டுகள் தடை விதிக்­கப்­படும் என்­பதை சர்­வதேச டென்னிஸ் சம்­மே­ளனம் இன்னும் முடிவு செய்­ய­வில்லை.

ஊக்­க­ம­ருந்து உப­யோ­கப்­ப­டுத்­தி­யதை தைரி­ய­மாக ஒப்­புக்­கொண்ட ஷர­போ­வாவின் செயல் பாராட்­டுக்­கு­ரி­யது என்று செரீனா வில்­லியம்ஸ் கூறினார்.

இந்த நிலையில் ஷர­போவா மீது, உலக தர­வ­ரி­சையில் 53ஆ-வது இடம் வகிக்கும் சுலோ­வக்­கி­யாவின் டொமி­னிகா சிபுல்­கோவா கடும் தாக்­குதல் தொடுத்­தி­ருக்­கிறார். சிபுல்­கோவா, போலந்து நாட்டின் விளை­யாட்டுப் பத்­தி­ரி­கைக்கு அளித்த ஒரு பேட்­டியில், ‘ஷர­போ­வா­வுக்­காக நான் எந்த வகை­யிலும் வருத்­தப்­ப­ட­மாட்டேன். டென்னிஸ் களத்தில் அவரை தவற விடு­கி­றோமே என்று நினைக்­கவும்­மாட்டேன். அவர் விரும்­பத்­த­காத ஒரு வீராங்­கனை. பிடி­வா­தக்­காரி. தற்­பெ­ருமை கொண்டவர். ஒரே அறையில் அருகருகே உட்கார்ந்தாலும் ஒரு ‘ஹலோ’ கூட சொல்லமாட்டார்’ என்று அதில் கூறியுள்ளார்.