சுகாதார விதிமுறைகளை மீறிய கருவாட்டு கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

Published By: R. Kalaichelvan

15 Feb, 2019 | 12:28 PM
image

பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்காமல் மக்களுக்குத் தீங்கு ஏற்படுத்தும் வகையில் சுகாதார விதிமுறைகளுக்கு முரணாக இயங்கிய 4 கருவாட்டுக்கடை உரிமையாளர்களுக்கு ரூபா 20 ஆயிரம் அபராதம் விதித்த நீதவான் இரு உணவகங்களை சீல் வைத்து மூடுமாறு உத்தரவிட்டு மேல் விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.மக்களின் முறைப்பாட்டை அடுத்து யாழ்.மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பா.சஞ்ஜீவன் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். நகரிலுள்ள சில கடைகளைச் சோதனைக்குட்படுத்தியபோது சுகாதார விதிமுறைகளுக்கு முரணான வகையில் 4 கருவாட்டுக்கடைகள் 3 உணவங்கள் ஒரே நாளில் அகப்பட்டுக் கொண்டன.

யாழ்.நகர் காங்ககேசன்துறை வீதியில் வீதியோரத்தில் திறந்த நிலையில் காட்சிப்படுத்தி வைத்திருந்த 105 கிலோ கருவாடுகளைக் கைப்பற்றி யாழ். நீதிமன்றத்தில் ஒப்படைத்த பரிசோதகர் நால்வருக்கும் எதிராக நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உடனடியாக விசாரணைக்கு எடுதபுதுக்கொள்ளப்பட்டபோது நால்வரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து இவர்களுகபுகு தலா 5 ஆயிரம் ரூபா வீதம் 20 ஆயிரம் அபராதம் விதித்த நீதவான் கைப்பற்றப்பட்ட கருவாடுகளை அழிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை மருத்துவச் சான்றிதழின்றி சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இயங்கிய யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள உணவகம் யாழ். பஸ்நிலையத்திற்கு முன்பாகவுள்ள உணவகம் யாழ். போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த உணவகம் 3 உணவு சாலை நிலையங்களின் உரிமையாளர்களுக்கும் தலா 7 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சுகாதார பரிசோதகரால் யாழ. நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை தாக்கல் செய்யப்ப்ட வழக்கு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள உணவகத்தின் உரிமையாளர் குற்றத்தை ஏற்றுக்கொண்டத அடுத்து அவருக்கு ரூபா 5 ஆயிரம் அபராதம் விதித்த நீதிவான் சுகாதாரப் பரிசோகரின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்வரை உணவத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் யாழிலுள்ள சிற்றுண்டிச் சுகாதாரப் பரிசோகரின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்ழுடும்வரை உணவகத்தை மூடுமாறு உத்தரவிட்ட நீதிவான் உரிமையாளரை ரூபா 50 ஆயிரம் சரீரப் பிணையில் செல்லுமாறு தெரிவித்து மேல் விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.

யாழ். பஸ்நிலையத்திற்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளர் குற்றத்தை ஏற்க மறுத்தமையை அடுத்து நீதிவான் உரிமையாளரை ரூபா 50 ஆயிரம் சரீரப்பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டு மேல் விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56