பலாலி விமான நிலையம் தொடர்பிலான இறுதி முடிவு விரைவில் 

Published By: Vishnu

15 Feb, 2019 | 11:09 AM
image

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலை­யத்தை அனைத்து வகை­யான விமானங்களும் தரை­யி­றங்­கு­வ­தற்கு ஏற்­ற­தாக 3.1 கிலோ மீற்­றர் நீள­மான ஓடு­பா­தை­யு­டன் மறு­சீ­ர­மைப்­பது தொடர்­பில் கொழும்­பில் இடம்­பெ­றும் கலந்­து­ரை­யா­ட­லில் இறுதி முடிவு எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. 

இந்த மறு­சீ­ர­மைப்­புப் பணி­க­ளுக்கு 20 பில்­லி­யன் ரூபா தேவை என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பா­ணத்­துக்கு நேற்று வருகை தந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அமைச்­சர் குழு­வி­னர் பலாலி வானூர்தி நிலை­யத்­துக்­குச் சென்று அபி­வி­ருத்­திப் பணி­கள் தொடர்­பில் ஆராய்ந்­த­னர்.

பலாலி வானூர்தி நிலைய அபி­வி­ருத்தி தொடர்­பில் சிவில் வானூர்­தித் திணைக்­க­ளத்­தால் இரண்டு யோச­னை­கள் முன்­வைக்­கப்­பட்­டன. 1.5 கிலோ மீற்­றர் நீள­மான ஓடு­பா­தையை 10 பில்­லி­யன் ரூபா செல­வில் அமைப்­பது. 3.1 கிலோ மீற்­றர் நீள­மான ஓடு­பா­தையை 20 பில்­லி­யன் ரூபா செல­வில் அமைப்­பது.

இந்த இரண்டு யோச­னை­கள் தொடர்­பில் ஆரா­யப்­பட்­டது. பலாலி விமான நிலை­யத்­தில் இந்­திய வானூர்­தி­கள் மாத்­தி­ரம் தரை­யி­றங்­கு­வ­தற்கு 1.5 கிலோ மீற்­றர் நீள­மான ஓடு­பாதை போது­மா­னது. வேறு பெரிய விமானங்கள் தரை­யி­றங்­கு­வ­தற்கு 3.1 கிலோ மீற்­றர் நீள­மான ஓடு­பாதை தேவை. நீண்ட கால நோக்­கில் 3.1 கிலோ மீற்­றர் நீள­மான ஓடு­பாதை அமைப்­பதே பொருத்­த­மா­னது என்ற யோசனை முன்­வைக்­கப்­பட்­டது.

பருத்­தித்­துறை – பொன்­னாலை வீதி மற்­றும் வல்லை – அராலி வீதி இரண்­டுக்­கும் இடைப்­பட்ட பிர­தே­சத்­தில் 3.1 கிலோ மீற்­றர் நீள­மான ஓடு­பா­தையை அமைக்க முடி­யும் என்று கூறப்­பட்­டது. இதற்கு மேல­திக காணி­க­ளைச் சுவீ­க­ரிக்­கா­மல் எப்­படி அமைக்­க­லாம் என்­பது பற்றி கொழும்­பில் ஆராய்­வ­தற்கு முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

மேலும், பன்­னாட்டு வானூர்­தி­கள் தரை­யி­றங்­கு­வ­தற்கு ‘நவிக்­கே­சன் லைட்ஸ்’ பொருத்­து­வது தொடர்­பி­லும் பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டது. ஓடு­பா­தை­யி­லி­ருந்து மேல் பக்­க­மாக 500 மீற்­ற­ரும், கீழ்ப்­பக்­க­மாக 500 மீற்­ற­ரும் தேவை என்று கூறப்­பட்­டது. அதற்கு பருத்­தித்­துறை – பொன்­னாலை மற்­றும் வல்லை – அராலி வீதி இரண்­டுக்­கும் அப்­பால் அதனை அமைக்க முடி­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இருப்­பி­னும் பலாலி வானூர்தி அபி­வி­ருத்தி தொடர்­பில் எந்­த­வொரு இறுதி முடி­வும் எடுக்­கப்­ப­டா­மல் கூட்­டம் நிறை­வ­டைந்­தது.

அத்துடன் காங்­கே­சன்­துறை துறை­மு­கத்­தை­யும் பிரதமர் தலை­மை­யி­லான குழு­வி­னர் சென்று பார்­வை­யிட்­ட­னர். அங்­கி­ருந்து தூத்­துக்­கு­டிக்கு டிங்கி பட­கில் பய­ணி­கள் சேவையை இங்­கி­ருந்து ஆரம்­பிப்­பது தொடர்­பி­லும் பேசப்­பட்­டுள்­ளது. 

காங்­கே­சன்­துறை சிமெந்­துக் கூட்­டுத்­தா­ப­னத்­துக்­குச் சொந்­த­மான காணி­யில் கடற்­ப­டை­யி­னர் நிலை கொண்­டுள்­ள­மை­யால், துறை­முக அபி­வி­ருத்தி இடைஞ்­சல் ஏற்­ப­டு­கின்­றமை தொடர்­பி­லும் இதன்­போது ஆரா­யப்­பட்­டுள்­ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19