(ப. பன்னீர்செல்வம், ஆர். ராம்)

இலங்கை கிரிக்கெட் விளையாட்டு சபையில் மீண்டும் இடைக்கால நிர்வாக சபையை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.

அதனைத்தாண்டி இடைக்கால நிர்வாக சபை உருவாக்கப்படுமாயின் எனது பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு செல்வேன் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விளையாட்டுக்களில் ஈடுபடும்போது ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு எதிரான இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான தனது பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.