ஐ றோட் செயற்றிட்டம் வடக்கில் நகைச்சுவையாக மாறியிருக்கின்றது ; கூட்டமைப்பு எம்.பி.கள் குற்றச்சாட்டு

Published By: Digital Desk 4

14 Feb, 2019 | 07:08 PM
image

ஐ றோட் செயற்றிட்டம் வடக்கில் நகைச்சுவையாக மாறியிருக்கின்றது. என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐ றோட் செயற்றிட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை உறுதியாக கூறுங்கள் என கேட்ட நிலையில், இந்த வருடம் மே மாதம் ஐ றோட் செயற்றிட்டத்தை நடை முறைப்படுத்துங்கள் என பிரதமா் ரணில் விக்கிரம சிங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்த ஆராய்வு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். 

இதன்போது வீதி அபிவிருத்தி சம்மந்தமான விடயம் பேசப்படுகையில், ஐ றோட் செயற்றிட்டம் எதற்காக ஆரம்பிக்கப்படாமல் உள்ளது? என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் ஈ.சரவணபவன் ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனா். 

இதற்கு பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரி இந்த வருடம் ஆரம்பமாகும் என கூறியிருந்தார். அப்போது இந்த வருடம் என்றால் இந்த வருடத்தில் எப்போது ஆரம்பமாகும்? எந்த மாதத்தில் ஆரம்பமாகும்? என நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் கேள்வி எழுப்பினார்.

தொடா்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் ஐ றோட் செயற்றிட்டம் என்பது வடக்கில் நகைச்சுவையாக மாறியிருக்கின்றது. என கூறினார். இதனையடுத்து சபையிலிருந்த வீதி அபிவருத்தி அதிகாரசபையின் அதிகாரியுடன் பேசிய பிரதமா் ரணில் விக்கிரமசிங்க எதற்காக ஐ றோட் செயற்றிட்டம் ஆரம்பமாவதற்கு காலதாமதமாகின்றது? என கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து இந்த வருடம் மே மாதமளவில் ஐ றோட் செயற்றிட்டம் ஆரம்பமாகும் என அதிகாரிகள் உ றுதியளித்தனா்.  மேலும் ஐ றோட் செயற்றிட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு செயற்றிட்டம் என்பதுடன், வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 206.08 கிலோ மீற்றா் நீளமான 53 வீதிகளும், உள்ளுராட்சி சபைகளுக்கு சொந்தமான 105.40 கிலோ மீற்றா் நீமான 116 வீதிகளும் புனரமைப்பு செய்யப்படவுள்ளன. 

இதற்காக 40 ஆயிரத்து 352 மில்லியன் ரூபாய் நிதி ஆசிய அபிவிருத்தி வங்கியினால் ஒதுக்கீடு செய்யப்படும்.எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50