Published by R. Kalaichelvan on 2019-02-14 16:03:15
(எம்.ஆர்.எம்.வஸீம்)
மாகாணசபை தேர்தலை மே மாதத்துக்குள் நடத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசாங்கத்தை வீழ்த்தியேனும் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடக கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் எந்த தேர்தலை அறிவித்தாலும் அதற்கு முகம்கொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். நாங்கள் பாரிய கூட்டணி அமைத்துக்கொண்டே தேர்தலுக்கு செல்வோம். அதற்கான இணக்கப்பட்டை எம்முடன் கூட்டணி அமைக்க இருக்கும் அனைத்து கட்சி தலைவர்களும் தெரிவித்துள்ளனர் என்றார்.