முக்கிய சதிக்காரரை தலைவராக நியமிப்பதா நல்லாட்சி ?

26 Nov, 2015 | 11:37 AM
image

ஜனவரி எட்டாம் திகதி முன்னெடுக்கப்பட விருந்த சதித்திட்டத்தின் முக்கியமான பங்காளராக விளங்கிய மேஜர் ஜெனரல் காமினி ஹெட்டியாராச்சி என்பவரை தொழிற்பயிற்சி அதிகார சபையின் தவைராக நியமித்தது எவ்வாறான நல்லாட்சி என தொழிற்பயிற்சி மற்றும் திறனபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார கேள்வியெழுப்பியுள்ளார்.

தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவர் நியமனம் ஜனாதிபதி செயலக குழுவின் பரிந்துரைக்கு அமைவாக அமையப்பெற்றதா என்பது தொடர்பாகவும் முறையான விசாரணை அவசியமெனவும் அவர் கூறினார்.

தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவர் நியமனம் ஜனாதிபதி செயலக குழுவின் பரிந்துரைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டதென்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான கோத்தபாய ராஜபக் ஷவின் நேரடி தலையீட்டின் கீழ் ஜனவரி எட்டாம் திகதியன்று தற்போதுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆட்சியை தடுக்கும் விதமாக சதித்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்திருந்தார். இம்முறைப்பாட்டில் இந்த தேசத்துரோக சதித்திட்டத்தின் பங்காளர்களாக எவன்கார்ட் நிறுவனம் மற்றும் மேஜர் ஜெனரல் காமினி பொன்சேகா போன்றோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில் தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவராக காமினி பொன்சேகாவை நியமித்தது அநீதியான செயலாகும்.

யுத்தகாலத்தின் போது நாட்டுக்காக இரத்தம் சிந்தி காத்த மேஜர் ஜெனரல் அவர்கள் மீது தனிப்பட்ட வகையில் எவ்விதமான விரோதங்களோ, குறுகிய எண்ணப்பாங்குகளோ என்னிடம் இல்லை. ஆனால் தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவராக நியமனம் பெறுவதற்கு அவருக்கு எவ்விதமான தகைமைகளும் இல்லை முன்னாள் பாதுகாப்பு அமைச்சருடன் இணைந்து நாட்டின் தேசிய நலனை கருத்திற்கொள்ளாது தேசிய பாதுகாப்பிற்குப் பங்கம் விளைவித்த ஒருவரை இவ்வாறு தலைமைப் பொறுப்பில் அமர்த்தியிருப்பது ஏன் என தொழிற்பயிற்சி மற்றும் திறனபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் கேள்வி எழுப்ப விரும்புகின்றேன்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை வெற்றிபெறச் செய்ய ஜனநாயகத்துக்கு அமைவான செயற்பாடுகளை முன்னெடுத்தார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் கீழ் பணிபுரிந்த இவர்களுக்கு குண்டர்கள், ஆயுத பலத்தைப் பயன்படுத்தி நாட்டைக் கைப்பற்ற முயன்றமை மறக்கமுடியாத காரணி.

இவ்வாறிருக்க எனது போராட்டம் மைத்திரி – ரணில் விரோத போராட்டமல்ல. மாறாக மைத்திரி – ரணில் ஆட்சியில் வழுப்படுத்தும் போராட்டம். அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் அவ்வாறான எண்ணத்துடனேயே செயற்பட வேண்டும். அதற்கு மாறாக மைத்திரி – ரணில் ஆட்சிக்கு எதிராக குண்டர்கள், ஆயுதபலத்தை பிரயோகித்தவர்களை மீண்டும் ஆட்சியில் அமர்ந்த முயற்சிக்கக் கூடாது. இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் ஆயுதபலத்தைத் தோற்கடித்து பெறப்பட்டது என்பதனை மறுக்க முடியாது.

ஆயினும் இவ்வாறான நியமனங்கள் மூலம் பாதுகாப்புத் தரப்பினருக்கு நிவாரணம் வழங்க முனையக் கூடாது. தொழிற்பயிற்சி அதிகார சபை என்பது பல புதிய திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளது. அவ்வாறு இருக்கும் போது மக்களின் நலனைப்பற்றி அறியாதவர்களுக்கு சலுகை வழங்க ஒரு போதும் இடமளிக்க முடியாதெனவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58