காதலர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது

Published By: Daya

14 Feb, 2019 | 09:20 AM
image

ஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் வந்தது மே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். காதலிக்கும் இளைஞர்கள் காதலர் தினத்தன்று  தங்களது காதலை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில் தான் காதலர் தின கொண்டாட்டம் தொடங்கியதற்கான சான்றுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கெனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை தடை செய்ய வேண்டும் எனவும் ஒரு அதிரடி உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. 

 இந்நிலையில் அந்நாட்டு பாதிரியார் வாலண்டைன் அரசனின் அறிவிப்பை மீறி இரகசியமாக அனைவரும் திருமணங்களை நடத்தி வைத்தார்.

முதல் காதல் மடல்:இதனையறிந்த மன்னன் வால்ண்டைனை கைது செய்த்ததோடு, மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதற்கிடையில் சிறைக்காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், சிறைக்காவலருக்கு இது தெரியவர அஸ்டோரியசை வீட்டு காவலில் வைத்தான். அப்போது தான் வாலண்டைன் அஸ்டோரியசுக்கு தனது முதல் காதல் வாழ்த்து அட்டை மூலம் செய்தி அனுப்பினார். 

கி.பி.270, பெப்ரவரி 14ஆம் திகதி  தான் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்தரவை செய்து  தலை துண்டிக்கப்பட்டு நிலையில் கொல்லப்பட்டார். இந்த நாளை தான் வாலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right