(எம்.ஆர்.எம்.வஸீம்)

மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதென்றால் கொமாண்டோ பாதுகாப்பு கொடுப்பதன் மூலம் அதனை தடுக்க முடியாது. கழுகு கண் பார்வை இருக்கும் பொலிஸாரே வழங்கப்பட வேண்டும். அப்போது தான் குண்டுகளுடன் வருபவரை தூரத்தில் இருந்து அறிந்து கொள்ள முடியும் என்று  நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

வடக்கில் கடும்போக்கு அமைப்புகள் இருப்பதாக தெரியவில்லை. அவ்வாறு இருந்தால் சம்பந்தன் அறிந்திருப்பார்.  எதிரணியில் இருப்பவர்களை அரசாங்கத்துக்குள் இழுப்பதற்கே அமைச்சுப்பதவிகள் வழங்கப்படுகின்றன எனவும் அவர்  தெரிவித்தார்.  

கொழும்பில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.