வடக்கு மக்கள் வாகன வரிப் பத்­தி­ரங்­க­ளைப் பெற்­றுக் கொள்­ள புதிய வசதி 

Published By: Digital Desk 4

13 Feb, 2019 | 03:26 PM
image

வாகன வரிப் பத்­தி­ரங்­க­ளைப் பெற்­றுக் கொள்­ளக் கூடிய தன்­னி­யக்க இயந்­தி­ரங்­கள் வடக்கு மாகாணத்­தில் 3 இடங்­க­ளில் பொருத்­தப்­ப­ட­வுள்­ளதென மாகாண மோட்­டார் போக்­கு­வ­ரத்­துத் திணைக்­க­ளம் தெரி­வித்­துள்­ளது.

வாகன வரிப் பத்­தி­ரங்­களை பிர­தேச செய­ல­கங்­க­ளில் பெற்­றுக் கொள்ள முடி­யும். ஆனால் அதைப் பெற்­றுக் கொள்­வ­தற்­காக அதிக நேரத்­தைச் செல­விட வேண்­டி­யுள்­ளது. அதை இல­கு­ப­டுத்­தும் வகையில் தன்­னி­யக்க இயந்­தி­ரம் மூலம் வாகன வரிப் பத்­தி­ரங்­களை வழங்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்ளது.

யாழ்ப்­பா­ணம் கைத­டி­யில் உள்ள பிரதி முதன்­மைச் செய­லர் அலு­வ­ல­கத்­தில் பரீட்­சார்த்­த­மாக ஏசி­யன் பவுண்­டே­ச­னின் தொழில் நுட்ப உத­வி­யு­டன் இந்த இயந்­தி­ரம் பொருத்­தப்­பட்­டுள்­ளது. வாக­னக் காப்­பு­றுதி மற்­று­ம் புகைச் சோத­னை­களை  மேற்­கொண்ட பின்­னர், இயந்­தி­ரத்­தில் கட­னட்­டை­யைச் செலுத்தி அதி­லுள்ள அறி­வு­றுத்­தல்­க­ளைப் பின்­பற்றி 14 நாள்­க­ளுக்­கான தற்­கா­லிக வாகன வரிப் பத்­தி­ரத்­தைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும்.

வாகன வரிப் பத்­தி­ரத்­துக்­கான முதன்­மைப் பிரதி வாக­னம் பதி­யப்­பட்ட புத்­த­கத்­தின் முக­வ­ரிக்­குத் தபால் மூலம் அனுப்­பப்­ப­டும். பரீட்­சார்த்­த­மா­கத் தற்­போது நடை­பெற்­று­வ­ரும் இந்­தச் சேவை­யில் ஏற்­ப­டும் சவால்­கள் ஆரா­யப்­பட்டு அவை தீர்க்­கப்­பட்டு இந்­தச் சேவையை மக்­க­ளுக்கு இல­கு­வில் கொண்டு செல்ல நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.

அதன்­பின்­னர் வவு­னியா, யாழ்ப்­பா­ணம் உட்­பட 3 இடங்­க­ளில் இந்­தத் தன்­னி­யக்க இயந்­தி­ரங்­கள் பொருத்­தப்­ப­டும். இந்த இயந்­தி­ரத்­தில் 24 மணி நேர­மும் சேவை­க­ளைப் பெற்­றுக் கொள்ள முடி­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19