குடும்ப கஷடத்தில் மீன்பிடியில் ஈடுபடுகிறேன் : விடுதலையாகிய சிறுவன் அங்கலாய்ப்பு

Published By: Robert

07 Apr, 2016 | 03:52 PM
image

எங்கள் குடும்பம் பெரியது. எங்கள் தந்தைக்கு உழைக்க முடியாத நிலை. இதனால் குடும்பப் பொறுப்பு என்னுடையதாக இருக்கின்றது. அதனால் நான் மீன்பிடி மூலம் உழைத்து எங்கள் குடும்பத்தை கொண்டு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். குடும்ப கஷடத்தில் மீன்பிடியில் ஈடுபடுகிறேன். எனது முதலாளியின் படகு இலங்கையில் சிக்கியுள்ளது. நான் என்ன செய்வேன் என்று இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவ சிறுவன் தெரிவித்தார்

சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவ சிறுவன் மன்னார் நீதிமன்றில் விடுதலையாகி தாய்நாட்டுக்கு திரும்பிச் செல்லும்போது இவ்வாறு கவலையுடன் தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் மார்ச் மாதம் வரை 06 சிறுவர்கள் உட்பட 44 இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வைத்து கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றின் கட்டளைக்கு அமைய சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும் ஏனையோர் விளக்கமறியலிலும் வைக்கப்பட்ட நிலையில் சட்டமா திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைய இவர்கள் புதன்கிழமை மன்னார் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

கைது செய்பட்ட இவ் இந்திய மீனவர்களில் மிகவும் வயது குறைந்த 15 வயது கொண்ட மீனவ சிறுவன் தெரிவித்ததாவது,

தமிழ்நாடு சினச பட்டினம், மாந்தோப்பு, தங்கச்சி மடத்தைச் சேர்ந்த அன்ரன் பிறைட்டன் (வயது 15) ஆகிய நான் எங்கள் குடும்பதில் மூத்த மகன். எங்கள் குடும்பத்தில் தாய் தந்தையுடன் மொத்தமாக ஏழு பேர் இருக்கின்றோம் எனக்கு மூன்று தங்கைகளும் ஒரு தம்பியும் இருக்கின்றார்கள்.

எனது சகோதரர்கள் எல்லோரும் பாடசாலைக்கு போகின்றார்கள் ஆனால் எங்கள் தகப்பனுக்கு எழுந்து நடக்கவோ அல்லது வேலை செய்யவோ முடியாது. அதனால் நான் எங்கள் குடும்பத்தில் மூத்தவனாக இருக்கின்றபடியாலும் எங்கள் அம்மா சமையல் மற்றும் எங்கள் எல்லோரையும் நாளாந்தம் கவனிக்க வேண்டியுள்ளதால் நான் தான் தொழில் செய்து குடும்பத்தை கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன்.

இதன் காரணமாகத்தான் மீன்பிடியில் ஈடுபட்டேன். இப்படி வந்தபோதுதான் இலங்கை நேவியிடம் மாட்டிக் கொண்டோம்.

நான் கடற்தொழிலுக்கு வந்தால் எனது முதலாளி ஐந்து நாட்களுக்கு இரண்டாயிரம் ரூபா தருவார். எங்கள் தம்பி தங்கைகளின் படிப்புகளுக்கும் எங்கள் வீட்டுச் செலவுகளுக்கும் இது போதாதுதான். இருந்தபோதும் சில சமயம் காசு தேவையென்றால் எனது முதலாளி தந்து உதவுவார்.

நான் பிடிபட்ட பிறகு எனது அம்மாவுடன் கதைத்தேன். அவர்கள் கவலைபட்டாலும் எனக்கு சொன்னாங்க தம்பி அழாத கவலைப்படாத என்று சொன்னாங்க. நான் பிடிபட்டு இங்கு இருந்ததால் வீட்டில் கஷடம் என்று சொன்னாலும் அம்மா எனக்கு ஆறுதல் வார்த்தைகள்தான் சொன்னாங்க.

என்னுடைய முதலாளியும் என்னோடுதான் தொழிலுக்கு வந்து பிடிபட்டு என்னுடன் விடுதலையாகி இருக்கின்றார். இதனால்தான் எங்கள் வீட்டுக்கு பணம் கொடுக்க யாரும் இல்லை.

நான் இப்பொழுது விடுதலையாகி எங்கள் நாட்டுக்கு சென்றாலும் என்ன தொழில் செய்யலாம் என்ற யோசனையாக இருக்கின்றது. ஏனென்றால் எனது முதலாளியின் படகை விடமாட்டாங்களாம். எனது முதலாளிக்கு நான்கு பெண்பிள்ளைகள் மட்டுந்தான் இருக்கின்றார்கள் அவருக்கு ஆண்பிள்ளைகள் எவரும் இல்லை. இதனால் முதலாளி என்னுடன் பாசம் அதிகம் என்றார். இந்த தொழிலை விட்டால் வேறு தொழில் செய்வதற்கான வசதிகள் எனது இடத்தில் இல்லை என அவ் சிறுவன் கண் கலங்கிய நிலையில் தனது சோகக் கதையைச் சொன்னார்.

-வாஸ் கூஞ்ஞ

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19