தெஹிவளை - பத்தரமுல்லைக்கு இடையிலான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வரையில் வீதி இலக்கம் 163 இல் சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து அதிகார சபையின் ஊழியர்கள் இலவச பயண அட்டையை பயன்படுத்தி பலாத்காரமான முறையில் குறித்த பஸ்களில் பயணிப்பதாக குற்றம் சுமத்தியே குறித்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்