பெருந்தோட்ட கம்பனிகள் பிரதேச சபைக்கு செலுத்தும் வரிகள் அதிகரிக்கப்படும் - கொட்டகலை பிரதேச சபை தலைவர் 

Published By: Digital Desk 4

12 Feb, 2019 | 02:31 PM
image

பெருந்தோட்ட கம்பனிகள் பிரதேச சபைகளுக்கு செலுத்தும் வரி மிக குறைந்த மட்டத்தில் இருப்பதால் தற்போதய சூழ்நிலைக்கேற்ப அதை மாற்றியமைக்க வேண்டியுள்ளதென கொட்டகலை பிரதேச சபை தலைவர் இராஜமணி பிரசாத் சபையின் மாதாந்த அமர்வில் தலைமையேற்று பேசும்போது தெரிவித்துள்ளார்.

சில பெருந்தோட்ட கம்பனிகள் தேயிலை செடிகளை தொழிலாளர்களுக்கு பராமரிப்பதற்காக உப குத்தகை அடிப்படையில் வழங்கியுள்ளன. இவ்வாறு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேயிலை செடிகளின் பரப்பிற்கு கம்பனிகளால் வசூலிக்கப்படும் வரி கம்பனிகளால் பிரதேச சபைகளுக்கு செலுத்தும் வரியை விட இரண்டு மடங்காக காணப்படுகின்றது. இந்த விடயத்தையும், நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தற்போது பெருந்தோட்ட நிறுவனங்கள் பிரதேச சபைகளுக்கு செலுத்தும் ஏக்கர் வரி, தொழிற்சாலை வரி, கட்டங்கள் அமைத்தலுக்கான அனுமதி மற்றும் அதற்கு செலுத்த வேண்டிய வரி போன்றவை குறைந்த மட்டத்தில் காணப்படுவதோடு, அவை முறையான உள்ளுராட்சி மன்ற சட்ட திட்டங்களுக்கு அமைய பேணப்படாமலிப்பது தெரியவந்துள்ளது.

அதனால் தோட்டங்கள் பிரதேச சபைகளுக்கு செலுத்த வேண்டிய வரிகள் தொடர்பான விடயங்களை மறுபரிசீலனை செய்து முறையான வரி வசூலிப்பு முறையை அறிமுகப்படுத்தவுள்ளோம் என்றார்.

அத்தோடு, பெருந்தோட்ட மக்களின் பல அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு பிரதேச சபையின் நிதியும், மக்கள் பிரதிநிதிகளினால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியும் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. எதிர்காலத்தில் தோட்ட கம்பனிகள் மூலம் அறவிடப்படும் நிதியையும் தோட்டங்களில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்த முடியும் எனவும் கொட்டகலை பிரதேச சபை தலைவர் இராஜமணி பிரசாத் இதன்போது மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47