பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா முன் கூட்டியே விடுதலை ஆக வாய்ப்பு இருப்பதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. 

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா முன் கூட்டியே விடுதலை ஆக வாய்ப்பு இருப்பதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. 

அ.தி.மு.க. ஆட்சி (1991-96) நடந்தபோது ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகிய 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

 இது தொடர்பான விசாரணையில் சசிகலாவும் அவரது உறவினர்களும் 66.65 கோடி ரூபாவுக்கு சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக தெரித்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றில் விசாரணை நடந்தது.

இதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி  பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பெங்களூர் ஜெயிலில் பெண்களுக்குரிய பகுதியில் இளவரசி தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் சிறை விதிகளை மீறி நடந்து கொண்டதாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டுகள் எழுந்தது. சிறைத்துறை அதிகாரிகளுக்கு அவர் இலஞ்சம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு 2 ஆண்டுகள் முடிய உள்ளது. இம்மாதம் 15 ஆம் திகதியுடன் அவர்களது சிறை வாழ்க்கை 2 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளரான சசிகலா தண்டனைக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே விடுதலையாவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த  வழக்கில் சசிகலா பெங்களூர் பரப்பான அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவருக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையில் இரண்டு வருடங்கள் கழிந்துள்ளன.

இந்நிலையில் கர்நாடகா மாநில சிறைத்துறை விதிகளின்படி நீண்டகால மற்றும் குறுகிய கால தண்டனை பெற்றவர்கள் மூன்றில் இரண்டு பங்கு காலம் சிறைத்தண்டனையை அனுபவித்து இருந்தால் அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது.

இதேவேளை இவ்வாறு சிறையில் தண்டனையை அனுபவிக்கும் காலகட்டத்தில் வேறு எந்த தவறும் செய்யாமல் நன்னடத்தையுடன் நடந்துகொண்டால் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய சட்ட விதிகளில் இடமுண்டு.

குறித்த சட்ட விதிகளை பயன்படுத்தி சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து அடுத்த ஆண்டு முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.