அடுத்த சில நாட்களுக்கு குறிப்பாக இன்று இரவிலிருந்து 13ஆம் திகதி வரை நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலைமை சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாடு முழுவதும் குறிப்பாக வடமேல், வடக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.