அரிசி ஆலை உரிமையாளர்கள் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நாளை 

Published By: Digital Desk 4

11 Feb, 2019 | 09:42 PM
image

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுடன் இன்று (11) பிற்பகல் பத்தரமுல்ல அபேகம வளாகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  இதனை தெரிவித்தார்.

இத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு அரச கொள்கைகளுக்கு அமைவாக அனைவருக்கும் உயர்ந்தபட்ச சலுகைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

அதேபோன்று வளர்ச்சியடைந்துள்ளோருக்கே மேலும் முன்னேறுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தாது வீழ்ச்சியடைந்துள்ளோரை மீண்டும் கட்டியெழுப்புவதற்கே அரச கொள்கைகளுக்கு அமைவாக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என  தெரிவித்தார்.

அத்துடன் வறுமையிலுள்ள மக்களை முன்னேற்றுவதற்கு முன்னுரிமையளித்து விரிவான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

புதிய பொருளாதார முறைகளுடன் அரச மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் நாட்டின் பொருளாதார சுபீட்சத்திற்காக வலுவான பயணமொன்றினை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும்  அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

விவசாய அமைச்சர் பீ.ஹரிசன், பொது வழங்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சரவை அந்தஸ்த்தல்லாத அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08