தம்புள்ளை ஹபரண பிரதான வீதியில் ஜீப் ரக வாகனம்  ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில், முச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் 35 மற்றும் 42 வயதுடைய கிரிவடுவத்த பிரதேசத்தினை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஜீப் ரக வாகனத்தில் பயணித்த இரண்டு  நபர்களும் திருக்கோணமலை பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என் கண்டறியப்பட்டுள்ளதோடு அவர்கள் இருவரையும் பொலிஸ் கைது செய்யப்பட்டுள்ளனர்.