கச்சத்தீவுக்கு நாட்டுப்படகை அனுமதிக்காவிட்டால் போராட்டம் ; பாம்பன் மீனவர் சங்கம் அறிவிப்பு

Published By: Digital Desk 4

09 Feb, 2019 | 06:28 PM
image

“இலங்கையின் கச்சத்தீவு ஆலய திருவிழாவிற்கு இந்தியாவிலிருந்து நாட்டுப்படகில் செல்ல அனுமதி வழங்காவிட்டால், மீனவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்” என்று, பாம்பன் மீனவர் சங்கம் அறிவித்துள்ளது.

இராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில், இந்தியா - இலங்கை இடையே உள்ள கச்சத்தீவில், புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் திருவிழாவில், தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். இந்த ஆண்டின் திருவிழா, எதிர்வரும் மார்ச் மாதம் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இதற்கான அழைப்பு கடிதத்தை, தமிழகத்தின் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மற்றும் வேர்க்கோடு புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை ஆகியோருக்கு, யாழ்ப்பாணம் முதன்மை குரு சேசுதாஸ் ஜெபரத்தினம் அனுப்பியிருந்தார். அதைத்தொடர்ந்து, வேர்க்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் தலைமையில், திருவிழாவுக்கு செல்வது தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆரம்ப காலங்களில், வள்ளம் எனப்படும் நாட்டுப்படகு மூலமாகவே தமிழக பக்தர்கள் கச்சத்தீவு சென்று திருவிழாவில் கலந்துகொண்டு திரும்பினர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடந்த 3 ஆண்டுகளாக இந்த திருவிழாவுக்கு நாட்டுப்படகுகளில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு, விசைப்படகில் மட்டுமே பக்தர்களை அழைத்துச்செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான திருவிழாவுக்கு செல்ல விருப்பம் தெரிவித்து இதுவரை 63 விசைப்படகுகளில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதனிடையே, கச்சத்தீவுக்கு நாட்டுப்படகில் செல்வதற்காக மாவட்ட கலெக்டரிடம் பாம்பன் மீனவர்கள் அனுமதி கோரியுள்ளனர். ஆனால், இதுவரை  அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதுகுறித்து, பாம்பன் நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் அருள் கூறியதாவது; “கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு பாரம்பரியமாக நாட்டுப்படகில்தான் சென்று வந்தோம். நாட்டுப்படகில் செல்வது பாதுகாப்பான பயணம்தான். கடந்த ஆண்டு, ‘கச்சத்தீவுக்கு நாட்டுப்படகில் செல்லலாம்’ என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது, பாம்பனில் இருந்து நாட்டுப் படகுகளில் செல்வதற்காக, ஒரு படகுக்கு 23 பேர் வீதம், 20 படகுகளில் செல்ல 460 பேர் பெயர் பதிவு செய்துள்ளனர்.

எனவே, நாட்டுப்படகில் செல்வதற்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய அனுமதி வழங்க வேண்டும். இது, எங்களின் வழிபாட்டு உரிமையாகும். கச்சத்தீவுக்கு நாட்டுப்படகில் வரக்கூடாது என்று இலங்கை அரசு கூறவில்லை. 

அப்படியிருக்கும்போது, தமிழக அரசு நாட்டுப் படகுகளை அனுமதிக்காதது வருத்தமளிக்கிறது. எனவே, நாட்டுப்படகில் சென்று புனித அந்தோணியாரை தரிசிக்க அனுமதி வழங்க வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேற்றப் படாவிட்டால், மீனவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்” என்று அவர் கூறினார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17