புலிகள் மூலம் மஹிந்தவை கொலை செய்ய சதித்திட்டம்

Published By: Priyatharshan

07 Apr, 2016 | 09:15 AM
image

வடக்கில் திட்­ட­மிட்ட வகையில் புலி­களின் ஆதிக் கம் தலை­தூக்கி வரு­கின்­றது. அவ்­வா­றான நிலையில் தேசிய பாது­காப்பு விட­யத்தில் அர­சாங்கம் மிகவும் மோச­மாக செயற்­ப­டு­வ­தாக பொது எதி­ரணி குற்றம் சாட்டியுள்ளது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் பாது­காப்புக்கு வழங்கப்பட்ட இராணுவத்தினரை நீக்­கி­விட்டு ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் திட்­ட­மிட்டு விடு­த­லைப்­பு­லி பயங்­க­ர­வா­தி­களின் மூல­மாக மஹிந்த ராஜபக் ஷவை கொலை­செய்ய திட்டம் தீட்­டி­யுள்­ளனர் எனவும் பொது எதிரணியினர் குற்றம்சுமத்தினர்.

பொது எதி­ர­ணி­யி­னரால் நேற்று கொழும்பில் நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்­பின்போதே அவ்­வ­ணி­யினர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர்.

இது தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­விக்­கையில்இ

மீண்டும் விடு­தலைப் புலி­களின் பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் தலை­தூ­கி­யுள்­ள­தாக புல­னாய்வு பிரிவு மூலம் தக­வல்கள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. வடக்கில் நடை­பெற்­று­வரும் தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லான செயற்­பா­டுகள் அர­சாங்­க­திற்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்­துள்­ளன.

ஆனால் அர­சாங்கம் இந்த சம்­ப­வங்கள் தொடர்பில் சிறி­த­ள­வேனும் கவனம் செலுத்­தாது தேசிய பாது­காப்பு விட­யத்தில் அக்­க­றை­யின்­றிய வகையில் தான் செயற்­ப­டு­கின்­றது. வடக்கில் ஆயு­தங்­களும் வெடி­பொ­ருட்­களும் மீட்­கப்­பட்­டுள்­ளன. புலி­களின் முக்­கிய நபர்­களின் செயற்­பா­டுகள் மீண்டும் வடக்கில் இடம்­பெற்­று­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது.

அவ்­வாறு இருக்­கையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் பாது­காப்­பிற்கு வழங்­கப்­பட்ட இராணுவத்தினரை மே மாதத்தில் இருந்து முழு­மை­யாக நீக்­கு­வ­தாக அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

எவ்­வாறு இருப்­பினும் ஜனா­தி­ப­தியும்இ பிர­த­மரும் தான் நாட்டின் பாது­காப்பு விட­யத்தில் தீர்­மானம் எடுக்­கின்­றனர். ஆகவே ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் திட்­ட­மிட்டு விடு­த­லைப்­பு­லி பயங்­க­ர­வா­தி­களின் மூல­மாக மஹிந்த ராஜபக் ஷவை கொலை­செய்ய திட்டம் தீட்­டி­யுள்­ளனர் என்­பது தெளி­வாக எமக்கு தெரி­கின்­றது.

அத­னால்தான் அவ­ருக்­கான இரா­ணுவ பாது­காப்பை முழு­மை­யாக நீக்­கப்­பார்க்­கின்­றனர். இரா­ணு­வத்தால் மட்­டுமே சரி­யான பாது­காப்பை அவ­ருக்கு வழங்க முடியும். அவ்­வாறு இருக்­கையில் அவர்­களை நீக்­கி­விட்டு சாதா­ராண பாது­காப்பை மாத்­திரம் வழங்கத் தீர்­மா­னித்­துள்­ள­தாக எமக்கு தக­வல்கள் கிடைத்­துள்­ளது.

ஆகவே இவர்கள் மஹிந்த ராஜபக் ஷவை பாது­காப்­ப­தற்கு பதி­லாக அவரை புலி­களின் மூல­மாக கொலை­செய்து புலி­களின் பழி­தீர்க்கும் நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ளவே முயற்­சிக்­கின்­றனர். நாம் யாரும் எந்த கட்­சி­யாக இருந்­தாலும்இ எவ்­வா­றான கொள்­கையில் இருந்­தாலும் நாட்டில் நில­விய கொடூ­ர­மான யுத்­தத்தை முடி­விற்கு கொண்­டு­வந்த தலைவரான மஹிந்த ராஜபக் ஷவை காப்­பாற்ற வேண்­டி­யது எம் அனை­வ­ரி­னதும் கட­மை­யாகும்.

அவ்­வாறு இருக்­கையில் அவரை கொன்று பழி­தீர்க்க இந்த அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது என்றால் அதை எவ்­வாறு நாம் வேடிக்கை பார்­து­கொண்­டி­ருப்­பது. ஆகவே மக்கள் இந்த செயற்­பா­டு­களை கண்­டித்து எம்­முடன் கைகோர்த்து போராட வேண்டும் என அவர் குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜி.எல்.பீரிஸ் கருத்து தெரி­விக்­கையில்,

தேசிய பாது­காப்பு விட­யத்தில் அர­சாங்கம் எப்­போதும் அதிக அக்­க­றை­யுடன் செயற்­பட வேண்டும். அண்­மையில் இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தி­களின் தாக்­கு­தலில் பெல்­ஜியம் பிறேசில்ஸ் நகரில் நடந்த குண்­டுத்­தாக்­கு­தலில் பின்­னணி சாதா­ரண ஒன்­றல்ல. இந்த தாக்­கு­தலின் பின்னர் அந்த நாட்டின் பாது­காப்பு மிகவும் பல­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது. ஆனால் இலங்­கையில் அவ்­வாறு அல்ல. இலங்­கையில் தேசிய பாது­காப்பு விட­யத்தில் அனைத்­துமே தலை­கீ­ழாக மாறி­யுள்­ளது.

சாவ­கச்­சேரி பகு­தியில் தற்­கொலை குண்டு அங்கி கண்­டெ­டுக்கப்பட்­டது. இந்த விடயம் சாதா­ராண ஒன்­றாக பாது­காப்பு தரப்பு தெரி­வித்­துள்­ளது. ஆனால் வட­மா­காண ஆளுநர் வேறு வித­மாக கருத்­து­களை முன்­வைத்­துள்ளார். இன்று தேசிய பாது­காப்பில் அர­சாங்­கத்தில் மாற்றுக் கருத்­துகள் பல உள்­ளன. அதேபோல் இந்த விடயம் தொடர்பில் எனக்கு கிடைத்த தக­வல்­களை நான் வெளிப்­ப­டுத்­தினேன். அப்­போது என்னை குற்றப் புல­னாய்வு பிரிவில் வைத்து விசா­ரணை செய்­தனர். மறு­புறம் இந்த சம்­பவம் புலி­க­ளுடன் தொடர்­பு­பட்ட ஒன்­றல்ல என சிவா­ஜி­லிங்கம் தெரி­வித்தார். ஆனால் அவர் மீது எந்த விசா­ர­ணை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

இன்று தேசிய பாது­காப்பு விட­யத்தில் அர­சாங்கம் மிகவும் மோச­மான வகையில் செயற்பட்டு வரு­கின்­றது. பாது­காப்பு செய­லாளர் ஒரு நிலை­பாட்­டிலும்இ அர­சாங்கம் ஒரு நிலைப்­பாட்­டிலும்இ வட­மா­காண ஆளுநர் வேறு ஒரு நிலை­பாட்­டிலும் உள்­ளனர். அவ்­வாறு இருக்­கையில் இந்த சம்­ப­வத்தின் பின்­ன­ணியை எவ்­வாறு கண்­ட­றிய முடியும். இந்த சம்­ப­வத்தின் பின்னணியை அரசாங்கம் ஒருபோதும் கண்டறியாது என எமக்கு நன்றாகவே விளங்குகின்றது.

இவ்வாறு நாட்டில் மோசமான சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பை குறைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு மோசமான சம்பவங்கள் நடைபெறும் நிலையில் எமது தலைவர் மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11