புலிகளின் தாக்குதலில் அங்கவீனமான பொலிஸார் - அரசாங்கம் எடுத்த அதிரடி தீர்மானம்

Published By: R. Kalaichelvan

08 Feb, 2019 | 06:49 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

புலிகளுக்கு எதிரான யுத்தத்தினால் அங்கவீனமடைந்த பொலிஸாருக்கான பதவியுயர்வுகள் மற்றும் சம்பள அதிகரிப்புகள்  வழங்கப்படுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளை 27/2இன் கீழ்  எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் எழுப்பிய ,யுத்தத்தினால் அங்கவீனமடைந்த பொலிஸாருக்கான பதவி உயர்வுகள் மற்றும் சம்பள அதிகரிப்பு என்பன வழங்கப்படவில்லை. இது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்ற  கேள்விக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அவயவங்களை இழந்து மருத்துவ ஆலோசனைக்கு அமைய  ஓய்வுபெற்ற பொலிஸார், இலகுவான பணிகளில் அமர்த்தப்பட்டுள்ள பொலிஸாருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பு வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

 இந்த அமைச்சரவை அங்கீகாரத்துக்கமைய,யுத்தத்தினால் அவயவங்களை இழந்து சேவையிலிருந்து ஓய்வுபெற்ற 785 பொலிஸ் அதிகாரிகள், அவயவங்களை இழந்து இலகு சேவையில் ஈடுபட்டுள்ள 677 பொலிஸார் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இலகு சேவையில் ஈடுபட்டுள்ளவர்களில் 340 பேருக்கும் இரண்டு சம்பள உயர்வுகளை அவர்கள் அங்கவீனம் அடைந்த தினத்தின் அடிப்படையில் பெற்றுக் கொடுப்பதற்கு 2018ஆம் ஆண்டு நவம்பர் மாத சுற்று நிருபத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19