''பால்மா விவகாரம்"- சுகாதார அமைச்சரை ஏமாற்றிவிட்டார்கள் : பொறுப்பேற்க தயார் என்கிறார் புத்திக்க

Published By: R. Kalaichelvan

08 Feb, 2019 | 04:03 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கு நான் பொறுப்பேற்க தயாராக இருக்கின்றேன். சுகாதார அமைச்சு அதிகாரிகள் சுகாதார அமைச்சரை ஏமாற்றியுள்ளனர். அதனால் தெரிவுக்குழு அனைத்து உண்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கைத்தொழில் வனிக துறை பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரண தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைள் நிறைவடைந்த பின்னர் இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மேலும் பால்மாவினால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் சுகாதார அமைச்சினால் பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் பால்மாவில் எந்த பிரச்சினையும் இல்லை என சுகாதாரஅமைச்சர் நேற்று  பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர் அவருக்கு கிடைக்கப்பெற்ற அறிக்கைகளைவைத்துக்கொண்டுதான் இவ்வாறு தெரிவித்திருப்பார். ஆனால் நான் சபையில் பொய் சொல்லவில்லை. சுகாதார அதிகாரிகள் சுகாதார அமைச்சரை  ஏமாற்றியுள்ளனர்.

எனவே இதுதொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து  இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் கலப்படங்கள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில் உண்மையை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15