இந்தோனேஷிய குடியுரிமை அதிகாரியை கன்னத்தில் அறைந்த இங்கிலாந்து பெண்ணுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த 42 வயதான டக்காடஸ் என்ற பெண் இந்தோனேஷியா சென்றிருந்தார். குறித்த பெண்ணின் விசா காலம் முடிவடைந்த பின்னரும் 4 மாதங்களுக்கு மேல் அங்கு தங்கி இருப்பது குடியேற்ற அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.

 இந்நிலையில் பாலி மாகாணத்தில் உள்ள விமான நிலையத்துக்கு வந்த டக்காடசை குடியேற்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். விசா கலாம் முடிந்த பின்னரும் இந்தோனேஷியாவில் தங்கி இருந்ததற்காக 3,500 அமெரிக்க டொலர்களை  அபராதமாக செலுத்தும்படி அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இதனை ஏற்காத டக்காடஸ் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டார். அத்துடன் குடியேற்ற அதிகாரி ஒருவரின் கன்னத்தில் அறைந்தமையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து குடியேற்ற அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். 

குறித்த பெண் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் நீதிபதி, டக்காடசுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.