Sri Lanka Corporate Health & Productivity Awards  வெற்றியாளர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வு

Published By: R. Kalaichelvan

08 Feb, 2019 | 11:43 AM
image

இலங்கை இளம் தொழில்முயற்சியாளர்கள் சம்மேளனம் (Chamber of Young Lankan Entrepreneurs-COYLE) மற்றும் ஜப்பான் வெளிவாரி வர்த்தக ஸ்தாபனம்(Japan External Trade Organization - JETRO) ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள Sri Lanka Corporate Health & Productivity Awards 2019 நிகழ்வானது 2019 பெப்ரவரி 13 ஆம் திகதியன்று பி.ப 4.30 மணி முதல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் Lotus Hall அரங்கில் இடம்பெறவுள்ளது.

2018 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்போட்டியானது இலங்கையில் பல முன்னணி நிறுவனங்களையும் ஈர்த்து,அவர்களுடைய உற்சாகத்துடனான பங்குபற்றலைப் பெற்றுள்ளது. கிடைக்கப்பெற்ற நுழைவு விண்ணப்பங்கள் மத்தியில் சுகாதாரம் மற்றும் உற்பத்தித்திறன் முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டங்களில் ஈடுபட்டுள்ள மிகச் சிறந்த நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு ஆய்வுகள் மற்றும் செயலமர்வுகள் நடைமுறை கொண்ட மிகக் கவனமாக பரிசீலனை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 

ISO  மற்றும் PAS போன்ற சர்வதேச தர அங்கீகார நடைமுறைகளின் கீழான ஐந்து முக்கியமான பண்புகளை தெரிவு நடைமுறை உள்ளடக்கியுள்ளது. முகாமைத்துவ கோட்பாடு மற்றும் கொள்கைகளில் சுகாதார மற்றும் உற்பத்தித்திறன் முகாமைத்துவத்தின் நிலையமைப்பு  சுகாதாரம் மற்றும் உற்பத்தித்திறன் முகாமைத்துவம் தொடர்பான பிரச்சனைகளை கையாள்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள், சுகாதாரம் தொடர்பில் அக்கறை கொண்டுள்ள

முகாமைத்துவத்தை உறுதி செய்வதற்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட விசேட முறைமைகள்ரூபவ் சுகாதாரம் மற்றும் உற்பத்தித்திறன் முகாமைத்துவத்தை மதிப்பீடு செய்து மேம்படுத்துதில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஏற்பாட்டு நடைமுறைகள் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் இடர் முகாமைத்துவம் ஆகியன அதில் உள்ளடங்கியுள்ளன.

முகாமைத்துவப் பரிமாணத்தில் தமது ஊழியர்களின் சுகாதாரத்தின் மேம்பாடு மீது மேற்குறிப்பிடப்பட்ட கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தி,அவற்றை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ள இலங்கையிலுள்ள மிகச் சிறந்த தொழில் நிறுவனங்களுக்கு Sri Lanka Corporate Health & Productivity Awards நிகழ்வில் பெருமதிப்பு மிக்க விருதுகள் வழங்கப்படவுள்ளன. 

ஊழியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிபாரிய, பாரிய,வ் நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் என்ற பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்.

தமது சாதனைகளுக்காக வெற்றியாளர்களுக்கு உரிய இனங்காணல் அங்கீகாரம் அளிக்கப்படவுள்ளதுடன், நீண்ட கால கோணத்தில் நிறுவனத்தின் பெறுமானத்தை மேம்படுத்துதற்கு முன்னுரிமையளிக்கும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவர்ச்சியான முதலீட்டுத் தெரிவாக  தெரிவு செய்யப்பட்ட சில நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படவுள்ள அதேசமயம் வெற்றி பெற்ற நிறுவனங்களை தற்போதைய மற்றும் எதிர்கால ஊழியர்கள் மத்தியில் கவர்ச்சியான பணியிடமாக அங்கீகரிக்கும் திட்டமும் உள்ளது.

COYLE இன் பணிப்பாளர் சபைத் தலைவரான டினுக் ஹெட்டியாராச்சி அவர்கள் இந்நிகழ்வு தொடர்பில் கருத்து

வெளியிடுகையில் ஊழியர்களின் உடல்நலன் தொடர்பான பேணல் மற்றும் மேம்பாடு ஆகியன எதிர்காலத்தில் இலாபத்திறனை அதிகரிக்கச் செய்கின்றன என்ற கோட்பாட்டின் கீழ், முகாமைத்துவப் பரிமாணத்தில் உற்றுநோக்குகையில், சுகாதாரம் மற்றும் உற்பத்தித்திறன் முகாமைத்துவம் ஆகியன சுகாதாரக் கட்டுப்பாட்டின் மூலோபாய நடைமுறையாக அமைந்துள்ளன. ஈடுபாடு, தக்கவைத்தல் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை மேம்படுத்தி இலங்கையில் வர்த்தகத்துறையின் செயல்திறனை உச்சப்படுத்தும் நோக்குடன் Sri Lanka Corporate Health & Productivity Awards விருதுகள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அம்சங்கள் அனைத்தும் ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான சிந்தனை கொண்ட தொழிற்படையைத் தோற்றுவிக்க உதவுவதுடன் உயர் உற்பத்தித் தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்க இடமளிக்கின்றன,” என்று குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் “ஜப்பானில் பொருளாதார வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு (METI)  மற்றும் டோக்கியோ பங்குச் சந்தை (TSE) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட “Health & Productivity Stock Selection”நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் இவ்விருது வைபவத்தின் எண்ணக்கரு வடிவமைக்கப்பட்டுள்ளது. COYLE மற்றும் JETRO ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் இடம்பெறுகின்ற “Health & Productivity Stock Selection” எம்முன்னே காணப்படும் மிக நீண்டதொரு பயணத்தில் ஒரு முன்னேற்றமாக அமைந்துள்ளதுடன், சுகாதாரம் மற்றும் உற்பத்தித்திறன் முகாமைத்துவத்தில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு பொது மக்கள் மத்தியில் இனங்காணல் அங்கீகாரத்தையும் அதிகரிக்கச் செய்கின்றது” என்று கூறினார்.

1999 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட COYLE, வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களை

உள்ளடக்கியவாறு இலங்கையிலுள்ள 120 உச்ச இளம் தொழில் முயற்சியாளர்களைக் கொண்ட ஒரு வர்த்தக சம்மேளனமாக இயங்கி வருவதுடன் விசாலமான தேசிய மற்றும் சர்வதேச வர்த்தக வலையமைப்பையும் இது கொண்டுள்ளது.“Recognition through Excellence” என்ற தனது தாரக மந்திரத்தினூடாக வர்த்தகங்கள் மற்றும் சமூகத்தை கட்டியெழுப்பும் இலக்குடன் அரசாங்க,அதிகாரிகள்ரூபவ் கொள்கை வகுப்பாளர்கள் சமூக அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு, சமூகத்திற்கும் தமக்கிடையிலும் உதவி வருகின்றனர்.

ஜப்பானுக்கும் உலகின் ஏனைய நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பது

சம்பந்தமாக பணியாற்றி வருகின்ற அரசு சார்ந்த ஒரு அமைப்பாக JETRO காணப்படுகின்றது. ஜப்பானிய ஏற்றுமதிகளை வெளிநாடுகளில் ஊக்குவிக்கும் நோக்குடன் 1958 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட JETRO  இன் பிரதான

இலக்கானது ஜப்பானில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் சிறிய முதல் நடுத்தர அளவிலான ஜப்பானிய

நிறுவனங்கள் தமது சர்வதேச ஏற்றுமதி வாய்ப்புக்களை உச்சமயப்படுத்துவதற்கு உதவுதல் ஆகியவற்றின் மீது 21 ஆவது நூற்றாண்டில் திசை திரும்பியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57