ஜி.எஸ்.டி. மூலம் கடந்த 9 மாதங்களில் தமிழக அரசுக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு தெரியுமா?

Published By: Daya

08 Feb, 2019 | 10:00 AM
image

சரக்கு சேவை வரி மூலம் கடந்த 9 மாதங்களில் மட்டும் தமிழக அரசுக்கு வருவாயாக 31 ஆயிரத்து 350.63 கோடி ரூபா கிடைத்துள்ளது.

 குறித்த வரி விதிப்பினால் மத்திய மற்றும் மாநில அரசுகள் வருவாயை ஈட்டி வருகின்றன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை, மத்திய அரசு அவ்வப்போது ஈடுகட்டி வருகிறது.

இந்த நிதி ஆண்டின் தொடக்கமான கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதிவரை 9 மாதங்களில் தமிழக அரசுக்கு எவ்வளவு வருவாய் மற்றும் இழப்பீடு கிடைத்துள்ளது என்ற தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

அதன் விபரம் வருமாறு:-

2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. மூலம் தமிழக அரசுக்கு ரூ.3,161.57 கோடி வருவாய் கிடைக்கப் பெற்றது. அதைத் தொடர்ந்து மே மாதத்தில் 2,864.29 கோடி ரூபா , ஜூனில் 4,718.51 கோடி ரூபா, ஜூலையில் 3,072 கோடி ரூபா, ஆகஸ்டில் 3,593.15 ரூபா,  செப்டெம்பரில் 3,014.26 ரூபா, அக்டோபரில் 4,159.91ரூபா,  நவம்பரில் 3,116.53 ரூபா, டிசம்பரில் 3,650.42ரூபா  என 9 மாதங்களில் தமிழகத்துக்கு மொத்தம் 31 ஆயிரத்து350.63 கோடி ரூபா வருவாய் கிடைத்துள்ளது.

குறித்த காலகட்டத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு இழப்பீட்டை வழங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலும், ஒக்டோபரிலும் இழப்பீடாக ஒரு ரூபாவைக்கூட மத்திய அரசு வழங்கவில்லை. செப்டெம்பரில் 308 கோடி ரூபா, நவம்பரில் 77 கோடி ரூபா, டிசம்பரில் 1,470 கோடி ரூபா என மொத்தம் 1,855 கோடி ரூபாவை தமிழக அரசுக்கு இழப்பீடாக மத்திய அரசு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13