புலம்பெயர் தமிழர்களால் நடுவீதிக்கு தள்ளப்படுவர்: நாமல் எச்சரிக்கை

Published By: MD.Lucias

06 Apr, 2016 | 07:49 PM
image

(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்)

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் வடக்கில் வாழும் தமிழ் மக்களின் வீடுகளை ஆக்கிரமிக்கும் ஆதிக்கத்தை அரசின் ஆட்சியுரிமைச் சட்டமூலம் ஏற்படுத்தும் என இன்று சபையில் எச்சரிக்கை விடுத்த ஐ.ம.சு. முன்னணி எம்.பி. நாமல் ராஜபக் ஷ. வடக்கில் 65,000 வீடுகளை அமைத்துக் கொடுப்பதாக எப்போதோ இந்தியா உறுதியளித்தது. அதனை இன்றாவது நிறைவேற்ற முயற்சிப்பதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகளை) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே நாமல் ராஜபக் ஷ எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

முப்பது வருட பயங்கரவாத யுத்தத்தால் இடம்பெயர்ந்து நெருக்கடிகளை சந்தித்த தமிழ் மக்கள் இன்று வடக்கில் கைவிடப்பட்ட வீடுகள் காணிகளில் குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நீதியமைச்சர் கொண்டுவந்துள்ள ஆட்சியுரிமை சட்ட மூலத்தினால் யுத்தத்திற்கு அஞ்சி வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் செல்வந்தர்களான தமிழர்கள் மீண்டும் இங்கு வந்து இம் மக்கள் வாழும் வீடுகளின் ஆரம்பகால உரிமையாளர்கள் தாம் என்பதை வெளிப்படுத்தி நீதிமன்றம் சென்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பல வருட காலம் வாழும் குடும்பங்களை வெளியேற்றும் நிலை உருவாகும்.

அம் மக்கள் மீண்டும்  நடுவீதிக்கு தள்ளப்படுவார்கள் இடம்பெயர்ந்தவர்களாவார்கள் இது அநீதியாகும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58