அடுத்த அமர்வில் உத்தேச தேசிய அரசாங்க யோசனை

Published By: Vishnu

07 Feb, 2019 | 04:51 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து அமைக்கும் தேசிய அரசாங்க யோசனையை இன்றைய தினம் சபையில் சமர்ப்பிக்க கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட போதும் இறுதி நேரத்தில்  பிரதமரின் ஆலோசனைக்கு அமைய ஐக்கிய தேசிய கட்சி அதனை ஒத்திவைத்துள்ளது.  அதற்கமைய அடுத்த பாராளுமன்ற அமர்வுகளில் உத்தேச தேசிய அரசாங்க யோசனையை எடுத்துகொள்ளப்படவுள்ளது. 

அமைச்சரவையையும் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களை அதிகரித்துக்கொள்ள தேசிய அரசாங்கம் அமைப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம் எடுத்ததுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க நேற்றைய தினம் சபையில் உத்தேச அரசியல் அமைப்பு யோசனை ஒன்றினை முன்வைப்பதாக  கூறியிருந்தனர். 

நேற்று  கூடிய கட்சி தலைவர் கூட்டத்தின் போது ஐக்கிய தேசிய கட்சி இந்த யோசனையை கூறியதை அடுத்து பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட சகல எதிர்க்கட்சிகளும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். 

எனினும் எந்த எதிர்ப்பு வந்தாலும் ஐக்கிய தேசிய கட்சி உத்தேச தேசிய அரசாங்க யோசனையை முன்வைக்கும் என கூறிய நிலையில்  நேற்று  இரவு  ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூடிய வேளையில் அதில் இந்த காரணிகள் ஆராயப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11