சபாநாயகரின் விசேட அறிவிப்பால் சபையில் காரசாரமான விவாதம்

Published By: R. Kalaichelvan

07 Feb, 2019 | 04:49 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அரசியல் அமைப்பு பேரவை மற்றும்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பில் ஜனாதிபதியின் விமர்சனக் கருத்து குறித்து அதிருப்தியை வெளியிட்டு ஜனாதிபதி தவறான காரணிகளை முன்வைத்தார் என சபாநாயகர் தெரிவித்த விசேட அறிவிப்பை  அடுத்து பிரதான எதிர்க்கட்சி சபையில் பெரும் குழப்பத்தை விளைவித்தனர்.

சபை நகர்வுகள் முழுமையாக தடுக்கப்பட்டதுடன் ஆளும் எதிர்க் கட்சி உறுப்பினர் இடையில் காரசாரமாக வாத விவாதமும் இடம்பெற்றது.

பாராளுமன்றத்தில் இன்று சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்ட போது அரசியல் அமைப்பு பேரவை  மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்து நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் முன்வைத்த கருத்துக்கள் குறித்து சபாநாயகர் விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்து அதில் ஜனாதிபதி தவறாக விமர்சனங்களை கையாண்டுள்ளார் என சுட்டிக்காட்டியதை அடுத்து ஜனாதிபதி பிரநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் சபையில் சபாநாயகர் கரு ஜெயசூரியவுடன் கடுமையான  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் அறிவிப்பை விடுத்த பின்னர் எதிர்க்கட்சி ஆசனங்களில் இருந்து ஆக்ரோசமாக எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டு சபாநாயகரை பார்த்து உரத்த குரலில் விமர்சிக்க ஆரம்பித்ததுடன் அனைவரும் தமக்கான ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினர். 

எனினும் யாருக்கும் ஒழுங்குப்பிரச்சினைக்கு இடமளிக்க மாட்டேன் என சபாநாயகர் தெரிவித்ததை அடுத்து சபையில் கூச்சலிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினர். 

இதன் பின்னர் ஒருவருக்கு மாத்திரம்  ஒழுங்குப் பிரச்சினை கேள்விக்கான சந்தர்ப்பத்தை தருவதாக கூறிய சபாநாயகர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீரவிற்கு வாய்ப்பினை கொடுத்தார். 

இதன்போது தனது கருத்தினை முன்வைத்த மஹிந்த அமரவீர எம்.பி:- ஜனாதிபதி நேற்று முன்வைத்த காரணிகள் குறித்து நீங்கள் இன்று விடுத்துள்ள அறிவிப்பை நாங்கள் முழுமையாக நிராகரிக்கின்றோம். உங்களில் கருத்துடன் நாம் இணங்கவில்லை என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்ள வேண்டும். இன்று நீதிமன்ற செயற்பாடுகளில் பாரிய முரண்பாடுகள் உள்ளது என கூறியபோது சபாநாயகர் ஒலிவாங்கியை நிறுத்திவிட்டு உங்களுக்கு இந்த சம்பவம் குறித்து விவாதம் நடத்த அங்கீகாரம் இல்லை. ஜனாதிபதி அவரது தரப்பு கருத்தினை கூறினார், எனினும் அரசியல் அமைப்பு பேரவை தலைவர் என்ற ரீதியில் எனது தரப்பு காரணிகளை இன்று நான் கூறினேன். அத்துடன் முடித்துக்கொள்ள வேண்டும். இது குறித்து வாத விவாதம் நடத்த முடியாது என்றார். 

இதன்போது மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழப்பத்தை ஏற்படுத்தினர். மீண்டும் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீரவிற்கு வாய்ப்பு கொடுத்தார், இதன்போது மஹிந்த அமரவீர கூறுகையில்:-நான் நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை, உங்களுக்கு எவ்வாறு உங்களின் கருத்தினை முன்வைக்க உரிமை உள்ளதோ அதேபோல் எமக்கும் எமது தரப்பு காரணிகளை சபையில் முன்வைக்க உரிமை உள்ளது. நான் கூறும் கருத்து தவறானது என்றால் எனது உரையை நீக்க உங்களுக்கு உரிமை உள்ளது.

முதலில் என்ன உரையாற்ற அனுமதியுங்கள். நீதிமன்ற செயற்பாடுகளில் அதிகளவில் குறைப்படுகளே உள்ளது. நீதியரசர் நியமனங்களில் குறைபாடுகள் உள்ளன. அதேபோல் மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்பாடுகளிலும் நீங்கள் கூறிய கருத்துக்கு எம்மால் இணக்கம் தெரிவிக்க முடியாது. ஆகவே இவை குறித்து காரணிகளை முன்வைக்க இன்று எமக்கு இடமளிக்க வேண்டும். எம்மை கட்டுப்படுத்த வேண்டாம். உங்களின் கருத்துக்கு பதில் தெரிவிக்க வேண்டிய தேவை எமக்கு உள்ளது என்றார். 

இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல :- அரசியல் அமைப்பு பேரவை குறித்த விவாதம் நடத்த பாராளுமன்றத்தில் ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இன்று விவாதிக்க முடியாது. இப்படி பாராளுமன்றத்தை குழப்பினால் அரசியல் அமைப்பு பேரவை விவாதத்தை தரவே மாட்டோம். நீங்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை.நாம் ஏற்கனவே இணக்கம் தெரிவித்தோம் இன்று நீங்கள் குழப்புவதால் நாம் விவாகத்ததை தரவே மாட்டோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51