மதுஷ் கைதின் பின்னணியை வெளியிட்டார் அமைச்சர் சாகல 

Published By: Daya

07 Feb, 2019 | 04:26 PM
image

(நா.தனுஜா)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த மதுஷ் உள்ளிட்டவர்களை கைது செய்வதற்கான திட்டம் தீட்டப்பட்டதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். 

கொழும்பு துறைமுகத்தில் தனியார் கம்பனியொன்றினால் வரி செலுத்தி நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இடமொன்றில் கண்டெடுக்கப்பட்ட புராதன பீரங்கி பாகமொன்றினை பார்வையிட வந்திருந்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,

நாங்கள் இங்கு திடீரென விஜயம் மேற்கொண்டமைக்குக் காரணம் துறைமுகத்தில் தனியார் கம்பனியொன்றினால் வரி செலுத்தி, தற்போது நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வரும் இடத்திலிருந்து புராதனமான பீரங்கியின் பாகமொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் பெறுமதி மற்றும் அது எந்தக் காலப்பகுதியைச் சேர்ந்தது என்ற விபரங்கள் இன்னமும் மதிப்பிடப்படவில்லை. மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருக்கின்றேன்.

 போதைப்பொருள் குற்றங்களைப் பொறுத்தவரையில் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸில் தனிப்பிரிவொன்று வேண்டும் எனத் தோன்றியது. அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். அப்பிரிவினர் மதூஷ் போன்ற போதைப்பொருளுடன் தொடர்புடையவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மதூஷ் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்று, கைது செய்ய முயற்சித்த போதிலும் அது சாத்தியமாகவில்லை. தற்போது அபுதாபியில் வைத்து மதூஷ் கைது செய்யப்பட்டிருக்கின்றார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் இங்கு வருகை தந்திருந்த போது இந்நடவடிக்கைகளுக்கு உதவுமாறு அவரிடம் கோரியிருந்தேன். இன்று ஒரு வெற்றிகரமான முடிவு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்து செயற்பட்ட அதிகாரிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஆவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31