'மாகந்துரே மதூஷை' இலங்கைக்கு அழைத்துவர பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சுகள் களத்தில்

Published By: Vishnu

06 Feb, 2019 | 07:30 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மாகந்துரே மதூஷை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பாதுகாப்பு அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் இடம்பெற்ற பல பாதாள உலக கொலைகள், போதைப் பொருள் கடத்தல்களின் பின்னணியில் இருக்கும் மிக முக்கிய புள்ளியான பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிலாகே மதூஷ் லக்ஷித்த ஐக்கிய அரபு அமீரகத்தின்  தலை நகரான அபுதாபியில்  6 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டு, பொலிஸ் தடுப்பில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

1963 ஆம் ஆண்டின் தூதரக உறவுகளுக்கான வியன்னா உடன்படிக்கையில் உள்ள விதி விதாங்களின் பிரகாரம், மாகந்துரே மதூஷயும் அவருடன் கைதுசெய்யப்பட்ட ஏனைய பாதாள உலகத்தவர்கள் உட்பட இலங்கையர்களையும் இலங்கைக்கு அழைத்து வந்து இங்கு வைத்து விசாரிக்க இராஜதந்திர ரீதியிலான நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதற்காக பாதுகாப்பு  அமைச்சினதும், வெளிவிவகார அமைச்சினதும் சட்ட வல்லுநர்களுடன் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் இணைந்து செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22