இந்திய மாணவர்கள் 129 பேர் அமெரிக்காவில் கைது

Published By: R. Kalaichelvan

06 Feb, 2019 | 11:09 AM
image

அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்வதற்கு ‘F 1’ விசா வழங்கப்படுகிறது. இப்படி‘F 1’ விசா பெறும் மாணவர்கள், படிப்பு முடிந்ததும் அமெரிக்காவிலேயே பணிபுரிவதற்காக பணி விசாவுக்காக காத்திருப்பது உண்டு.

அந்த வகையில் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பார்மிங்டன் பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் பதிவு செய்துகொண்டுள்ளனர்.

ஆனால் இந்த பார்மிங்டன் பல்கலைக்கழகம், விசா மோசடிகளையும், குடியேற்ற விதி மீறல்களையும் கண்டறிவதற்காக உள்நாட்டு பாதுகாப்புத்துறையால் போலியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரகசிய நடவடிக்கை குறித்து அறியாமல், இந்தியர்கள் 8 பேர், வெளிநாட்டு மாணவர்கள் 600 பேரை அமெரிக்காவிலேயே தங்கவைப்பதற்காக பார்மிங்டன் பல்கலைக்கழகத்தை நாடடினர்.

இதையடுத்து, அவர்கள் விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக 8 பேரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இப்பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக விண்ணப்பித்த 130 மாணவர்களையும் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர்.

மற்ற 129 பேரும் இந்தியர்கள் ஆவார்கள். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்திய மாணவர்கள் 129 பேரையும் உடனடியாக விடுவிக்கும்படி கோரிக்கை விடுவித்தனர்.

இந்த நிலையில், விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 8 பேர் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள கிழக்கு மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் தங்கள் குற்றவாளிகள் இல்லை என வாதாடினர்.

இதற்கிடையே இந்த விசா முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட 129 இந்திய மாணவர்களும், தெரிந்தே தவறு செய்ததாக அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,‘‘வகுப்புகள் ஏதும் நடைபெறாது, வகுப்புகளில் தாங்கள் கலந்துகொள்ளப்போவதில்லை எனத் தெரிந்தே இவர்கள், பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துகொண்டு கட்டணம் செலுத்தினர். தவறான முறையில் மாணவர் என்ற அந்தஸ்தில் அமெரிக்காவில் தங்கியிருப்பதற்காக போலி பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துகொண்டுள்ளனர்’’ என தெரிவித்தனர்.

ஆனால், மாணவர்கள் தரப்பில் வாதாடும் வக்கீல்களோ, போலி பல்கலைக்கழகம் என தெரியாமல் மாணவர்கள் சேர்ந்துவிட்டதாகவும், தவறுகளை கண்டறிவது என்ற பெயரில் அதிகாரிகள் மோசமான ஒரு முறையை பின்பற்றியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08