பாடசாலைக்குள் அரசியலை புகுத்த வேண்டாம்.!

Published By: Robert

06 Apr, 2016 | 04:42 PM
image

மத்திய கொழும்பு இந்து மகா வித்தியாலயத்தின் பாரிய அபிவிருத்திக்கு உறுதுணையாக நின்ற இன்றைய பாடசாலையின் அதிபரை இடம்மாற்றம் செய்து அவரை விட சேவை தரத்தில் குறைந்தவரை அதிபராக நியமிக்கும் அரசியல் பழிவாங்கலை நடாத்தி பாடசாலைகளுக்குள் அரசியலை புகுத்த வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

2004ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு பெப்ரவரி வரை சிறப்பான முறையில் அதிபராக கடமையாற்றிய திருமதி தயானந்தி சிறிசோமா இப்பாடசாலையின் பாரிய அபிவிருத்திக்கு என்னுடன் இணைந்து செய்ல்பட்டதை இப்பாடசாலை சமூகம் நன்கு அறியும். இவரது வேண்டுகோளுக்கிணங்கவே இப்பாடசாலையின் மூன்று மாடி கட்டிடம் கூமார் 4 கோடி ரூபாய் செலவில் எனது முயற்சியினூடாக கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டிடத்திற்கு அத்திவாரம் அமைப்பதற்கு முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் 30 இலட்ச ரூபாயும் இன்றைய அமைச்சர் மனோ கணேசன் 10 இலட்ச ரூபாய் வழங்கியதனையும் அன்றைய முதலமைச்சர் ரெஜினோல் குரேயுடன் பேசி நான் பெற்றுக் கொடுத்த 30 இலட்ச ரூபாயுமே காரணமாக இருந்ததனை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன். பின்பு அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க 3 கோடிக்கும் அதிகமான நிதியினை நான் பெற்று இக்கட்டிடத்தை கடந்த ஆண்டு முற்பகுதியில் கட்டி முடித்திருந்தேன். இப்பாடசாலையின் அதிபர் திருமதி சிறிசோமாவினதும் ஆசிரியர்களினதும் அபிவிருத்தி சங்கத்தினரதும் வேண்டுகோளுக்கிணங்க இப்பாடசாலையின் வரவேற்பு மண்டபத்திற்கு பிரபா கணேசன் மண்டபம் என பெயரிடப்பட்டு இக்கட்டிடம் கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இவ்வாறாக பல பாடசாலைகளில் கட்டிடங்களை கட்டிக் கொடுத்த அரசியல்வாதிகளின் பெயர்களை சூடுவது சாதாரண விடயமாகும்.

இக்கட்டிடம் மட்டுமின்றி இப்பாடசாலைக்கு தேவையாக தளபாடங்கள், போட்டோ பிரதி இயந்திரங்கள், கணினி தொகுதிகள், விளையாட்டு உபகரணங்கள், ஒலிபெருக்கி சாதனங்கள் போன்ற பல தேவைகளையும் என்னால் நிறைவேற்றிக் கொடுகப்பட்டதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். அண்மையில் இப்பாடசாலையின் முன்னாள் அதிபரின் பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் அமைச்சர் ஒருவர் வரவேற்பு மண்டபத்தில் இருந்த எனது பெயரை நீங்கள் அழிக்கின்றீர்களா அல்லது நான் அழிக்கவா என்று பேசிவிட்டு சென்றதனை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் வேதனையுடன் எனது கவனத்திற்கு கொண்டு வந்ததையிட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

இவரது வேண்டுகோளினை செவிசாய்க்காத காரணத்தினால் இப்பாடசாலையின் அபிவிருத்தியில் பிரதி அதிபராக செய்ல்பட்ட இன்றைய புதிய அதிபராக பொறுப்பேற்றிருப்பவரை அப்புறப்படுத்தி இந்து மகா வித்தியாலயத்திற்கு இந்து மதத்தினை சாராத ஒருவரை அதிபராக நியமிக்க முற்படுவது எவ்விததிலும் நியாயமானதல்ல. இவ் நியமனத்திற்கு இன்று பாடசாலையின் ஆசிரியர்களும் பெற்றோர்களும் பழைய மணவர்களும் பாரிய எதிரப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். இவ் ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கல்வி பணிப்பாளரின் தலையீட்டினூடாக இப்புதிய நியமனம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது பாடசாலைகளின் நலன் விரும்பிகளின் வெற்றியாகும்.

மேலும் இப்பாடசாலையின் இன்றைய அதிபரின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக் கொள்கின்றேன். இப்பாடசாலையின் வரவேற்பு மண்டபத்தில் இருக்கும் எனது பெயரினை அழிப்பதன் மூலமாக இப்பாடசாலைகளுக்குள் எவ்வித அரசியல் பழிவாங்கலும் இடம்பெறாது என்றால் அதனை அழிப்பதற்கு எனக்கு எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை. அதே நேரத்தில் வெறுமனே விளம்பர அரசியல் நடத்தி வருபவர்கள் இதனை விட சிறப்பான கட்டிடங்களை கொழும்பு மாவட்ட தமிழ் பாடசாலைகளுக்கு கட்டி கொடுத்து தங்களது பெயரை சூட்டிக் கொள்வார்களேயானால் நான் நிச்சயமாக மகிழ்ச்சியடைவேன். மாறாக பாடசாலைகளுக்குள் அரசியலை புகுத்தி அங்கே தமிழ் மக்கள் மத்தியிலே பிரிவினை ஏற்படுத்தி கடந்த சில வருடங்களாக அபிவிருத்தி செய்யப்பட்டு வந்திருக்கும் கொழும்பு மாவட்ட தமிழ் கல்விக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என உறுக்கமான வேண்டுகோள் விடுக்கின்றேன்.பதில் அறிக்கை விடுவதை தவிர்த்து ஆக்கபூர்வமான அபிவிருத்தி செயல்பாடுகளில் ஈடுபட்டு எமது தமிழ் கல்வி சமூகத்தை வளர்த்தெடுப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58