வடகொரியா அணு ஆயுதங்களை  பாதுகாத்து வருகிறது:ஐ.நா 

Published By: R. Kalaichelvan

05 Feb, 2019 | 04:04 PM
image

வடகொரியா அணுஆயுதங்களை பாதுகாக்கின்றுது என ஐக்கிய நாடுகளின் சபை புதிதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள 315 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 15 பேர் கொண்ட குழு நேற்று வெளியிட்டுள்ளது. அதில், ”வடகொரியா அணுஆயுதங்களை பாதுகாக்கிறது. அவற்றை எந்த  இராணுவத்தின் மூலம் அழிக்க முடியாத திறனுடன் அதனை  அந்நாடு வைத்துள்ளது. 

இதற்கு ஆதாரங்கள் உள்ளது.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம்முடனான நெருக்கத்தில் முன்னேற்றம் கண்டிருக்கிறார்” 

ஆனால் இந்த அறிக்கைக்கு வடகொரியா தரப்பில் இன்னும் பதில் தரப்படவில்லை.முன்னதாக  கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது.

இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.

இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் - கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு ஏற்பட்டது.

இச் சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பும் - வடகொரிய ஜனாதிபதி கிம்மும் மீண்டும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10