பாரிய மாற்றத்திற்குள்ளாகும் இலங்கை அணி- தலைமைப்பதவி யாருக்கு?

Published By: Rajeeban

05 Feb, 2019 | 03:59 PM
image

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து  வரும் இலங்கை அணியை  பலப்படு;த்தும் நோக்கில் பல மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இதன் காரணமாக அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து சண்டிக ஹதுருசிங்க நீக்கப்படலாம் என விளையாட்டுதுறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளா பதவியிலிருந்து சண்டிக ஹத்துருசிங்கவை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ள இலங்கையின் விளையாட்டமைச்சு இதற்கான சட்ட ஆலோசனையை கோரியுள்ளது

ஹத்துருசிங்கவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இடைநடுவில் முறித்துக்கொள்வது சாத்தியமா என விளையாட்டுத்துறை அமைச்சு சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரையை கோரியுள்ளது

விளையாட்டுத்துறை அமைச்சரின் வேண்டுகோளின் அடிப்படையில் நாங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இந்த ஆலோசனையை கோரியுள்ளோம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்

இந்நிலையில் தென்னாபிரிக்க தொடரிற்கு முன்னதாக ஹதுருசிங்க வெளியேற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன

இதேபோன்று அணித்தலைவர் பதவியிலிருந்து தினேஸ் சந்திமல் நீக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்துள்ள இலங்கை அணி தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில்  அணியின் தலைமைப்பதவியிலிருந்து தினேஸ் சந்திமல் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அணியின் புதிய தலைவராக திமுத் கருணாரட்ன நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன

இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமலின் துடு;ப்பாட்டமும் மோசமாகவுள்ள நிலையிலேயே அவரை மாற்றுவதற்கு தீர்மானி;க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அணியில் தற்போது இடம்பெற்றுள்ள பல வீரர்களை அவர்கள் மீண்டும் சிறந்த நிலைக்கு திரும்பும்வரை அணியிலிருந்து நீக்கிவிட்டு  இலங்கை ஏ அணியில் சிறப்பாக விளையாடிவரும் வீரர்களிற்கு வாய்ப்பை வழங்குவது குறித்து ஆராயப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இலங்கை அணிக்குள் பல பிரச்சினைகள் உள்ளன,அணிக்குள் மோதல் காணப்படுகின்றது அணி வீரர்கள் தனித்தனி துருவங்களாக பிரிந்து செயற்படுகின்றனர் என இலங்கை கிரிக்கெட்டுடன் தொடர்புபட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இலங்கை அணி வீரர்கள் பல குழுக்களாக பிரிந்து செயற்படுகின்றனர்  சில வீரர்கள் மற்றவர்களுடன் பேசுவதுகூட இல்லை எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

2019 உலக கிண்ணப்போட்டிகள் குறித்த நம்பிக்கையை நாங்கள் ஏற்கனவே கைவிட்டுவிட்டோம்,முதல்சுற்றில் வெற்றிபெற்று அடுத்த சுற்றிற்கு செல்வோம் என எதிர்பார்ப்பது கூட அர்த்தமற்ற விடயம் என தெரிவித்துள்ள பேச்சாளர் ஒருவர் இதன் காரணமாக உலக கிண்ணப்போட்டிகள் வரை காத்திருப்பதில் அர்த்தமில்லை இலங்கை கிரிக்கெட்டிற்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21