புறக்கோட்டையில் வர்த்தக நிலையங்கள் பூட்டு

Published By: Daya

05 Feb, 2019 | 02:13 PM
image

கொழும்பு- புறக்கோட்டையில் வர்த்த நிலைகள் இன்று மூடப்பட்டு ஹர்த்தால் முன்னெடுக்கப்ட்டு வருகின்றது. 

சுங்க தொழிற்சங்க ஊழியர்களின் போராட்டத்தால் தாம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து, புறக்கோட்டை மொத்த வியாபார நிலைய உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த வர்த்தகர்கள் சங்கம், கொழும்பிலுள்ள  மொத்த விற்பனை நிலையங்களை மூடி இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை தமது பிரச்சினைகளுக்கு இன்றைய தினத்திற்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால், அத்தியாவசிய உணவுகள் மற்றும் மருந்துகளை விடுவிக்கும் பணியிலிருந்து விலகுவதாக சுங்க தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுங்க தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று  7 ஆவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில், குறித்த போராட்டத்திற்கு மதுவரித் திணைக்களத்தின் 14 தொழிற்சங்கங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.

அத்தோடு, கொள்கலன் போக்குவரத்து சங்கத்தினருடன், பதிவாளர்கள் சங்கத்தினரும் இன்று முதல் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சுங்கத் திணைக்கள பணிப்பாளராக இருந்த பி.எஸ்.எம். சார்ல்ஸ் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப்போராட்டம் இன்றுடன் 7 நாட்களாக இடம்பெற்று வருகுகின்றது. இன்றைய பாராளுமன்ற அமர்வில் குறித்த போராட்டத்திற்கு தீர்வுகாணப்படும்  என சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்கள் தெரிவித்துள்ளது. 

இன்று தீர்மான எட்டப்படவில்லை என்றால் அத்தியவசியமான சேவைகளிலிருந்து அதிகாரிகள் விலகப்போவதாக தெரிவிததுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58