இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அண்மைக் காலத்தில் கைது செய்யப்பட்டு யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இந்திய மீனவர்களில்  24 மீனவர்கள் நேற்று ஊர்காவற்துறை நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 24 மீனவர்களும் யாழ் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தினரால் இந்திய துணைத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.