இந்தியாவிடம் விஜய் மல்லையாவை ஒப்படைக்க இங்கிலாந்து அனுமதி

Published By: R. Kalaichelvan

05 Feb, 2019 | 12:01 PM
image

இந்தியாவால் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை செயலர் சஜித் ஜாவித் அனுமதி அளித்துள்ளார்.

இம்முடிவை எதிர்த்து மல்லையா மேல்முறையீடு செய்ய 14 நாள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மல்லையாவை விசாரிக்க இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல லண்டன் நீதிமன்றம் இரண்டு மாதங்களுக்குபின் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிங் ஃபிஷர் நிறுவனத்தின் தலைவராக இருந்த மல்லையா , ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுடன் மார்ச் மாதம் 2016 ஆம் திகதி இந்தியாவைவிட்டு வெளியேறினார்.

இந்தியாவைவிட்டு தப்பித்துச்சென்றதாக கூறப்படுவதை மறுத்த விஜய் மல்லையா , தனது கடன்களை தான் திருப்பி செலுத்துவதாகவும் கடந்த வருடம் ஜூலை மாதம் தெரிவித்தார்.

கிங் பிஷர் மூலம் பெரும் பணம் சம்பாதித்த விஜய் மல்லையா, பின் கிரிக்கெட் மற்றும் பார்முலா 1 ரேஸ் போட்டிகளிலும் கால் பதித்தார். அவரை கடனாளியாக மாற்றிய கிங் ஃபிஷர் விமான சேவை நிறுவனத்தை 2005ஆம் ஆண்டு நிறுவினார் விஜய் மல்லையா.

கிங் ஃபிஷர் விமான சேவை நிறுவனத்தில் ஏற்பட்ட நிதி முறைகேடுகள் தொடர்பாக விஜய் மல்லையா மீது பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டன. அவை மத்திய புலனாய்வு மற்றும் நிதி முறைகேடுகளை விசாரிக்கும் அமலாக்க இயக்குநரகத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

2012 ஆம் ஆண்டு விஜய் மல்லையா தனது யூனைடெட் ஸ்பிரிட் குழுமத்தின் பெரும் பங்கை பிரிட்டனின் டியாகோ குளிர்பான நிறுவனத்திடம் விற்றார்.

அதன்படி கிங் ஃபிஷர் விமான சேவை நிறுவனத்துக்கு நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2012ஆம் ஆண்டு கிங் ஃபிஷர் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு அடுத்த ஆண்டு அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து ஐந்து வருடங்கள் நஷ்டத்தில் ஓடிய கிங் ஃபிஷர் விமான சேவை நிறுவனத்துக்கு யாரும் கடன் கொடுக்க முன் வராததால், நிறுவனம் சிரமப்பட்டது.

கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் கடன் தொகை அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த 2012ஆம் ஆண்டு அந்நிறுவனத்தை நடத்துவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.

ஊழியர்களுக்கு தரப்படாத ஊதியம் மற்றும் நிறுவனத்துக்கான செலுவுகள் உட்பட, விஜய் மல்லயாவின் மொத்த கடன் மதிப்புகள் மற்றும் 1 பில்லியன் டொலர்களுக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தனது ஆடம்பரமான வாழ்க்கைக்கு புகழ்பெற்ற விஜய் மல்லையா இந்தியாவின் "ரிசர்ட் பிரான்சன்" என்றும் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50