அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி எதிர்வரும் யூலை மாதம் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் தொடர்களிலும் 5 ஒருநாள் தொடர்களிலும் 2 இருபதுக்கு -20 போட்டிகளிலும் பங்கேற்று விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் யூலை மாதம் 26 ஆம் திகதி பல்லேகலயில் ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டி கண்டி பல்லேகலயில் யூலை மாதம் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையும் 2 ஆவது டெஸ்ட் போட்டி காலியில் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையும் 3 ஆவது டெஸ்ட் போட்டி கொழும்பில் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையும் இடம்பெறவுள்ளது.

இதையடுத்து ஆகஸ்ட்  மாதம் 21 ஆம் திகதி முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி கொழும்பிலும்  ஆகஸ்ட்  மாதம் 21 ஆம் திகதி 2 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டி கொழும்பிலும் 3 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டி ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி தம்புள்ளையிலும் 4 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டி ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி தம்புள்ளையிலும்  5 ஆவது ஒருநாள் போட்டி செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி கண்டியிலும் இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது இருபதுக்கு - 20 போட்டி செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி கண்டியிலும் 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டி செப்டெம்பர் மாதம்  9 ஆம் திகதி கொழும்பிலும் இடம்பெறவுள்ளது.