அமெரிக்காவில் கடும் குளிர்!

Published By: Daya

05 Feb, 2019 | 09:35 AM
image

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் வரலாறு காணாத அளவுக்கு கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் சிகாகோ நகரில் வீடு இல்லாத நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கியதோடு, அவர்கள் தங்குவதற்கு ஹோட்டல்களில் அறையும் எடுத்துக்கொடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளார் கேண்டிஸ் பெய்ன்.

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் வரலாறு காணாத அளவுக்கு கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு நிலவுகிறது.

குறிப்பாக இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகரில் மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கும் குறைவாக வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வீடுகள் இல்லாமல் பொதுஇடங்களில் வசித்து வரும் மக்களின் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. கடும் குளிர்காற்றை தாங்கிக்கொண்டு பனித்துகள்களின் மீது படுத்து உறங்கவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கேண்டிஸ் பெய்ன் என்ற பெண் சிகாகோ நகரில் வீடு இல்லாத நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கியதோடு, அவர்கள் தங்குவதற்கு ஓட்டல்களில் அறையும் எடுத்துக்கொடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

குறித்த ஹோட்டலில் ஒரு அறைக்கு, ஒருநாள் 70 டொலர்  வீதம் கட்டணமாக செலுத்தி 30 அறைகளை எடுத்து வீடு இல்லாதவர்களை தங்கவைத்துள்ளார்.

அவர் இந்த திட்டம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்ததும் அவருக்கு அனைத்து வகையிலும் உதவ தன்னார்வலர்கள் குவிந்தனர். அத்துடன் அவரது வங்கி கணக்கில் பணத்தையும் செலவழித்து வருகிறார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47