தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை - ஹக்கீம் அதிரடி அறிவிப்பு

Published By: Vishnu

04 Feb, 2019 | 03:09 PM
image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்காவிட்டால் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்திருந்தார். தோட்டத் தொழிலாளர்களின் தேவையை வென்றெடுக்கும் நோக்கில் நாங்களும் அவருடன் கைகோர்ப்பதற்கு தயாராக இருக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் பாத்ததும்பற தேர்தல் தொகுதியின் பன்வில பிரதேசத்தில் கல்வல வீதி, விக்னேஸ்வரா வீதி, ஆயுர்வேத வீதி, ராக்ஷாவ பெருந்தோட்ட கீழ்ப்பிரிவு ஆகியவற்றில் 6 மில்லியன் ரூபா செலவில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் பூர்த்திசெய்யப்பட்ட குடிநீர் வழங்கல் திட்டங்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய அவர், 

பாராளுமன்றத்திலுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல், பின்கதவால் பிரதமரை அழைத்து ஒப்பந்தம் செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அதன் பின்விளைவை இன்று அரசாங்கமும் உணர்ந்துள்ளது. திறந்தமுறையில் வெளிப்படையாக இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமையை ஐக்கிய தேசியக் கட்சித்தான் தீர்த்துக்கொடுத்தது. அதுபோல, சம்பளப் பிரச்சினையை அவர்கள்தான் தீர்க்கவேண்டும். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை திறந்த முறையில் நடத்தப்படவேண்டும். இதற்கான அழுத்தங்களை நாங்கள் பிரயோகிக்க வேண்டும். இதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுத்துள்ள போராட்டம் வெற்றிபெற வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும் அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:57:56
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04