கொட்டும் மழையின் மத்தியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வு

Published By: Priyatharshan

04 Feb, 2019 | 12:28 PM
image

இலங்கையின் 71 ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் கொட்டும் மழையிலும், யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது.

யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக முப்டைகள் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்புக்களுடன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதன்பின்னர், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ஏற்றுக்கொண்டனர்.

சங்கானை கலாசார மத்திய நிலைய மாணவிகளின் நடன நிகழ்வு இடம்பெற்றதைத் தொடர்ந்து, யாழ்.மாவட்ட பாடசாலை மாணவர்களின் பேன்ட் இசை மற்றும், மாணவர் படையணியின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், யாழ். மாவட்ட இராணுவத்தளபதி, அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

வடக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழையுடனான காலநிலை நிலவுகின்றது.

இந்நிலையில் இன்று காலையும் பலத்த மழை பெய்தது. எனினும், கொட்டும் மழையிலும் தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படங்களுக்கு யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழையின் மத்தியில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31