நுவரெலியா - லவர்ஸ்லீப் தோட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவால் 4 வீடுகளின் சுவர்கள் சரிந்து விழுந்துள்ளதுடன் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பாதிக்கபட்டவர்களை தோட்டத்தில் உள்ள ஆலயத்தில் தங்கவைப்பதுக்கான நடவடிக்கையினை தோட்ட நிர்வாகம் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் எவருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை. பாதிக்கபட்ட லயன் தொகுதி ஏற்கனவே வெடிப்புற்று காணப்பட்டதாகவும் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு 40 வருடங்களுக்கு முன்பு இக்குடியிருப்பு மாட்டு பட்டியாக இருந்ததாவும் தோட்டத்தில் வீடுகள் இல்லாத காரணத்தினால் இதனை தமக்கு வழங்கியதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையிலும் நிவாரண உதவிகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையென இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.