இமாலய இலக்கை நிர்ணயித்த ஆஸி.

Published By: Vishnu

03 Feb, 2019 | 04:18 PM
image

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 516 என்ற மிகப்பெரிய வெற்றியிலக்கை  நிர்ணயித்துள்ளது.

அவுஸ்திரேலிய, இலங்கை அணிகள் மோதும் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கான்பெர்ராவில் நடைபெற்று வருகிறது. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 534 ரன் குவித்து, ஆட்டத்தை இடை நிறுத்தியது. ஜோ பேர்ன்ஸ் 180 ஓட்டத்தையும், டிராவிஸ் ஹெட் 161 ஓட்டத்தையும், பேட்டர்சன் 114 ஓட்டத்தையும் பெற்று சதம் விளாசினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸுக்காக களமிறங்கிய இலங்கை அணி நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்து இருந்தது.

இந் நிலையில் போட்டியின் மூன்றாவது நாட் ஆட்டம் இன்று ஆரம்பித்தது. நேற்றைய ஆட்டத்தில் பந்து தாக்கி நிலைகுலைந்து மைதானத்தில் சுருண்டு வீழ்ந்த இலங்கை அணியின் தொடக்க வீரர் திமுத் கருணாரத்ன சிகிச்னையின் பின்னர் இன்று தொடர்ந்து ஆடினார். அதன்படி அவர் 59 ஓட்டத்தில் ஆட்டம் இழக்க குசால் பெரேரா கம்மின்ஸ் பவுன்சரில் காயம் அடைந்து 29 ஓட்டத்துடன் வெளியேறினார்.

அடுத்தடுத்து களமிறங்கிய இலங்கை அணியின்  வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்சில் 215 ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுளையும் நாதன் லயன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனால் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 319 ரன்கள் முன்னிலை பெற்றதுடன் பாலோ-ஒன் கொடுக்காது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது.

உஸ்மான் கவாஜா 101 ரன்னும், டிராவிஸ் ஹெட் 59 ரன்னும் அடிக்க அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்த நிலையில் 2 ஆவது இன்னிங்ஸை இடை நிறுதிக் கொண்டது.

அதனால் அவுஸ்திரேலிய அணி மொத்தமாக 515 ஓட்டங்களை இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்தது. 516 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கி துடுப்பெடுத்தாட இன்றைய மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களை பெற்றது.

லஹிரு திரிமன்ற மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் ஆடுகளத்தில் தலா 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர். 

நாளை போட்டியின் நான்காம் நாள் ஆட்டமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22