புதிய கூட்டு ஒப்பந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு தற்காலிக தடை ; 5 ஆம் திகதி மீண்டும் பேச்சுவார்த்தை

Published By: Vishnu

01 Feb, 2019 | 08:31 PM
image

(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக செய்துகொள்ளப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தை வர்த்தமானிப்படுத்தலை தற்காலிகமான இடைநிறுத்துவதற்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான தமிழ் முற்போக்கு கூட்டணியின் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. 

மேலும் எதிர்வரும் 5 ஆம் திகதி அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க மற்றும் ரவீந்திர சமவீர ஆகியோர்களது பங்குபற்றலுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கடந்த திங்கட்கிழமை அலரி மாளிகையில் புதிய கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டிருந்தது. அதில் அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிய கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி அதில் பிரதமர் கலந்து கொண்டிருந்தமைக்கு விசனம் வெளியிட்டிருந்தது. 

இதன் காரணமாக தாம் தொடர்ந்தும் அரசாங்கத்தில் நீடிப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், பிரதமருடனான பேச்சுவார்த்தையின் அது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி இன்று மாலை 4 மணியளவில் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேஷன், பிரதி தலைவர்களான பழனி திகாம்பரம், வேலுசாமி இராதா கிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான திலகர், அரவிந்த குமார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44