Corporate Health Productivity Awards நிகழ்விற்கு ayubo.life  கைகோர்ப்பு

Published By: R. Kalaichelvan

01 Feb, 2019 | 04:45 PM
image

ஜப்பான் வெளிவாரி வர்த்தக ஸ்தாபனத்துடன் (Japan External Trade Organization -JETRO) இணைந்து இலங்கை இளம் தொழில்முயற்சியாளர்கள் சம்மேளனத்தால் (Chamber of Young Lankan Entrepreneurs - COYLE) ஏற்பாடு செய்யப்படுகின்ற Sri Lanka Corporate Health & Productivity Awards 2019 விருதுகள் நிகழ்வுக்கு அனுசரணை வழங்குவதற்கு இலங்கையின் முன்னணி ஸ்மார்ட்போன் ஆரோக்கிய மற்றும் உடற்பயிற்சி சார்ந்த செயலியான (app), ayubo.life உடன் கைகோர்த்துள்ளது.

 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் ஆரோக்கியத்திற்கான தெரிவுகளை ஊக்குவிக்கும் அளவுகோல்களை வரையறுக்கும் செயல்முறையில் தனது நிபுணத்துவம் மற்றும் அறிவை நிறுவனம் இதன் மூலமாக வழங்கியுள்ளது.

இப்பங்குடமை தொடர்பில் COYLE இன் பணிப்பாளர் சபைத் தலைவரான டினுக் ஹெட்டியாராச்சி அவர்கள் கருத்து வெளியிடுகையில் “ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் முகாமைத்துவம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு பொது மக்கள் மத்தியில் இனங்காணல் அங்கீகாரத்தை மேம்படுத்தும் இந்த முயற்சியில் ayubo.life உடன் கைகோர்த்துள்ளமை எமக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது. நிறுவனங்கள் மத்தியில் ஆரோக்கியத்தை வளர்ப்பதற்கு பல்வேறு புத்தாக்கமான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய தேவை இலங்கையில் காணப்படுகின்றது.

 உடல்நலன் சார்ந்த வல்லுனர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உடல்நலன் சார்ந்த நிகழ்ச்சித்திட்டங்களில் இணைந்து நிறுவனத்தால் முன்னெடுக்கப்படுகின்ற ஆரோக்கியம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு உடல்நலன் சார்ந்த தமது முயற்சிகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல பயனர்களுக்கு இடமளிக்கின்ற ஒரு app  ஆக ayubo.life அமைந்துள்ளது. 

அவர்களுடைய நிபுணத்துவம் மற்றும் அனுபவம் ஆகியனSri Lanka Corporate Health & Productivity Awards 2019 விருதுகள் நிகழ்விற்கு அவர்களின் துணையை

நாடுவதற்கு எம்மைத் தூண்டியுள்ளன” என்று குறிப்பிட்டார்.

ஈடுபாடு,தக்கவைத்தல்,உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை மேம்படுத்தி இலங்கையில் வர்த்தகத்துறையின் செயல்திறனை உச்சப்படுத்தும் நோக்குடன் Sri Lanka Corporate Health & Productivity Awards  விருதுகள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மேற்குறிப்பிட்ட அம்சங்கள் அனைத்தும் ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான சிந்தனை கொண்ட தொழிற்படையைத் தோற்றுவிக்க உதவுவதுடன் உயர் உற்பத்தித் தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்க இது இடமளிக்கின்றது.

தொழிற்துறை மட்டத்தில் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டங்களை ஊக்குவித்து விழிப்புணர்வை அதிகரிக்கும் ஒரே நோக்கத்துடன்நாட்டிலுள்ள பல்வேறு வர்த்தகச் சமூகங்களையும்

ஒன்றிணைக்கும் வகையில் முதற்தடவையாக இடம்பெறுகின்ற ஒரு நிகழ்வு என்ற பாராட்டை இது சம்பாதித்துள்ளது. பொருளாதார,வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு மற்றும் டோக்கியோ பங்குச் சந்தை ஆகியவற்றால் ஜப்பானில் நடாத்தப்பட்ட “Health & Productivity Stock Selection”என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் இவ்விருதுகள் நிகழ்விற்கான எண்ணக்கரு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ayubo.life  இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான டாக்டர் சமிலா ஆரியானந்த அவர்கள் இப்பங்குடமை தொடர்பில் கருத்து வெளியிடுகையில் “பாரம்பரிய உடல்நலன் முறைமைகளுக்குப் பதிலாக குணமளிக்கும் மற்றும் தடுக்கும் தீர்வுகளை அடையப்பெறும் தேவையே நிறுவனங்கள் மத்தியில் உள்ளதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். 

Sri Lanka Corporate Health & Productivity Awards 2019  நிகழ்வுக்கு பிரதான உடல்நலன் பங்காளராக இணைந்து கொள்வதற்கு எம்மை உந்துவித்த காரணமும் அதுவே. COYLE மற்றும் JETRO ஆகியவற்றால் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு மகத்தான முயற்சியாக நாம் இந்நிகழ்வைக் கருதுவதுடன் இது வெற்றியளிப்பதற்கு எமது தீவிர உணர்வு மற்றும் அறிவை அவர்களுடன் பகிர்ந்து அவர்களுக்கு உறுதுணையளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்” என்று குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில் “COYLE மற்றும் JETRO ஆகியவற்றுடன் கூட்டிணைந்து ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் முகாமைத்துவத்தில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும் அதேசமயம் நீண்ட பயணம் ஒன்றை மேற்கொள்ள தலைப்பட்டுள்ளது. 

அவர்களுடன் இணைந்து ஒட்டுமொத்த வர்த்தக சமூகத்திற்கும் ஆரோக்கியமான ஒரு சூழலைத் தோற்றுவிக்க முடியும் என்ற நம்பிக்கையை நாம் கொண்டுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

1999 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட COYLE, வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களை உள்ளடக்கியவாறு  இலங்கையிலுள்ள 120 உச்ச இளம் தொழில் முயற்சியாளர்களைக் கொண்ட ஒரு வர்த்தக சம்மேளனமாக இயங்கி வருவதுடன்ரூபவ் விசாலமான தேசிய மற்றும் சர்வதேச வர்த்தக வலையமைப்பையும் இது கொண்டுள்ளது.

“Recognition through Excellence” ” என்ற தனது தாரக மந்திரத்தினூடாக வர்த்தகங்கள் மற்றும் சமூகத்தை கட்டியெழுப்பும் இலக்குடன் அரசாங்க,அதிகாரிகள் கொள்கை வகுப்பாளர்கள், சமூக அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு சமூகத்திற்கும் தமக்கிடையிலும் உதவி வருகின்றனர்.

ஜப்பானுக்கும் உலகின் ஏனைய நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பது சம்பந்தமாக பணியாற்றி வருகின்ற அரசு சார்ந்த ஒரு அமைப்பாக JETRO காணப்படுகின்றது.

ஜப்பானிய ஏற்றுமதிகளை வெளிநாடுகளில் ஊக்குவிக்கும் நோக்குடன் 1958 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட JETRO இன் பிரதான இலக்கானது ஜப்பானில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் சிறிய முதல் நடுத்தர அளவிலான ஜப்பானிய நிறுவனங்கள் தமது சர்வதேச ஏற்றுமதி வாய்ப்புக்களை உச்சமயப்படுத்துவதற்கு உதவுதல் ஆகியவற்றின் மீது 21 ஆவது நூற்றாண்டில் திசை திரும்பியுள்ளது.

ஆரோக்கியமாக வாழ விரும்புகின்ற அனைவருக்கும் முழுமையான தளமேடை ஒன்றை அமைத்து வாழ்க்கை முறை, ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான ஒரு செயலியாக (app) ayubo.life காணப்படுகின்றது.

இந்த app ஆனது பல்வேறு சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை இணைத்து குடும்ப மருத்துவ தரவு பதிவுகளை தேக்கி வீடியோ மூலமாக தேவைப்படும் நேரங்களில் வைத்தியர்களின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள அனுசரணையளித்து உடற்பயிற்சி தொடர்பான பதிவு விபரங்களை பேணுவதுடன் இணையத்தின் மூலமாக உடல்நலன் தீர்வுகளை வழங்குவதற்கு உடல்நலன் சார்ந்த தொழிற்துறை வல்லுனர்களுடன் பங்குடமைகளையும் ஏற்படுத்தி வருகின்றது. 

Hemas Holdings PLC இன் நிதியுதவியுடனும்,ஆதரவுடனும் இயங்கி வருகின்றDigital Healthcare Solutions Ltd என்ற நிறுவனத்தால் ayubo.life இயக்கப்பட்டு வருவதுடன்ரூபவ் அதன் உடமையாகவும் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58