1000 ரூபா சம்பள கோரிக்கை நிராகரிப்பு - பதவிகளைப்பெற்ற வடிவேல் சுரேஷ் எவ்வாறு நியாயப்படுத்துவார்?

Published By: R. Kalaichelvan

01 Feb, 2019 | 03:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் நெருக்கடியின் போது வடிவேல் சுரேஷ் கட்சி தாவல்களில் ஈடுபட்டு  இராஜாங்க அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டார்.

இதற்கு அவர் குறிப்பிட்ட ஒரே நியாயப்படுத்தல் காரணம் மலையக மக்களுக்கு 1000 ரூபா சம்பளம். இன்று இம்மக்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுடன் பாரிய காட்டிக்கொடுப்பே இடம் பெற்றுள்ளது. இவ்விடயத்தில் வடிவேல் சுரேஸின் நியாயப்படுத்தல்  என்ன  என பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் கேள்வியெழுப்பினார்.

பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில்  இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு   குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 இவ்வாறு கட்சி தாவல்களில் ஈடுப்பட்டும் எவ்விதமான மாற்றங்களும் மலையக மக்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இவர்களின் பிரதான நோக்கம் எவர் ஆட்சி செய்தாலும் தமக்கு ஒரு பதவி கிடைக்க வேண்டும் என்பது மாத்திரமே தவிர தன்னை தெரிவு செய்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற வேண்டும் என்பது அல்ல  ஆகவே இனியாவது மலையக மக்கள் அரசியல் ரீதியில் ஒரு முறையான தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும்.தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஒரு படிப்பினையாக கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08