புதிய தேர்தல் முறைமையில் திருத்தங்கள் - வரவேற்கிறார் ரவுப் ஹக்கீம்

Published By: Daya

01 Feb, 2019 | 03:03 PM
image

(செய்திப் பிரிவு)

மாகாணசபை தேர்தல் முறையில் இன விகிதாசாரத்தை இல்லாமல் செய்ய வேண்டுமென்ற நிலவரம் தோன்றி அதற்கு பாரிய எதிர்ப்பு சிறுபான்மை சமூகங்களிலிருந்து வெளிப்பட்டதன் விளைவாக, இப்பொழுது அமைச்சரவையில் ஏற்கெ னவே செய்யப்பட்ட திருத்தம் மாற்றியமைக்கப்படுவதற்கான முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளமை  வரவேற்கதக்க விடயமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

பண்டாரகம, அட்டுலுகம, அல் கஸ்ஸாலி மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி நேற்று  வியாழக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

 எங்களது பெறுமதியான வாக்குகளை இரண்டு, மூன்று கட்சிகளுக்கு பிரித்து கொடுப்பதனால் பெரிய தவறை செய்கின்றோம். ஆனால், விகிதாரசார தேர்தல் முறைமையை சரிவர பயன்படுத்த முடியுமாக இருந்தால் பெரிய கட்சிகளோடு சரியான பேச்சுவார்த்தையை நடத்தி இந்த விடயங்களில் நாங்கள் எவ்வாறான அடைவுகளை அடைய வேண்டும் என்பதில் எங்களுக்கு மத்தியில் ஒரு தெளிவும் சரியான அணுகுமுறையும் அமையப் பெற வேண்டுமென்பது அவசியமாக இருக்கின்றது. 

பிரதமரோடு மாகாண சபை தேர்தல் குறித்து பேச்சுவார்த்தையொன்று ஏற்பாடாகியிருக்கின்ற காரணத்தினால், அதில் கலந்துகொண்டு முக்கிய விடயங்களை கலந்தாலோசிக்க வேண்டியிருக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19